தமிழர் பேரவையின் கல்வி உதவி நிதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - இறுதி நாள் நவம்பர் 15 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2018

தமிழர் பேரவையின் கல்வி உதவி நிதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - இறுதி நாள் நவம்பர் 15


தமிழர் பேரவையின் கல்வி உதவிநிதியைப் பெற மாணவர்கள் இப் போது விண்ணப்பிக்கலாம்.கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழர் பேரவை உதவி தேவைப்படும் இந்திய மாணவர் களுக்கு கல்வி உபகார நிதி வழங்கி வருகிறது.

$150 முதல் $300 வரை வழங்கப்படும் இந்த உதவி நிதியை இதுவரை சுமார் 3,000 மாணவர்கள் பெற்று பயனடைந்து உள்ளனர். இதன் மூலம் மொத்தம்$200,000 நிதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு முதல் தமிழர் பேரவை சங்கம்,சிண்டா, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை ஆகிய மூன்று முக்கிய அமைப்புகளும் ஒன்றாக இணைந்து இந்த கல்வி உதவி நிதியை இந்திய குடும் பங்களைச் சேர்ந்த உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன.நிர்வாகக் குழுவினர் ஒருசில விதிமுறைகளுடன் மாணவர் களைத் தேர்வு செய்து இந்த உதவி நிதியை வழங்குகின்றனர்.

2019ஆம் ஆண்டில் மாண வர்கள் தொடக்கப்பள்ளியில் கட் டாயம் சேர்க்கப்படவேண்டும். மாணவர்கள் தமிழை இரண் டாம் மொழியாக எடுத்திருக்க வேண்டும். குடும்ப நிகர வருமானம் $2,000க்கு மேல் போகாமல் இருக்கவேண்டும். மற்ற எந்த ஒரு நிறுவனத்தில் இருந்தும் கல்வி உதவி நிதி அல்லது வேறெந்த உதவிகளும் பெறாமல் இருக்கவேண்டும்.

தங்கள் குழந்தைகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தை 546ஏ, சிராங்கூன் ரோடு, சிங்கப் பூர் 218168 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். படிவங்களை www.trc.org.sg/forms.php. என்ற இணைய முகவரியில் பதி விறக்கம் செய்யலாம். மேல்விவரங்கள் வேண்டுவோர் திரு தர்மராஜ்- 9625 5145, திரு பாண்டியன்- 9184 8123 ஆகி யோரை அழைக்கலாம்.

விண்ணப் பத்தை அனுப்பி வைப்பதற்கான இறுதிநாள் 15 நவம்பர் 2018

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி