26ம் தேதி முதல் வழக்கம் போல் இன்ஜினியரிங் தேர்வுகள்: அண்ணா பல்கலை. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2018

26ம் தேதி முதல் வழக்கம் போல் இன்ஜினியரிங் தேர்வுகள்: அண்ணா பல்கலை. அறிவிப்பு


 நவம்பர் 26ம் தேதி முதல் வழக்கம் போல் இன்ஜினியரிங் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர்-டிசம்பரில் இரண்டாவது பருவ செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். கஜா புயல் பாதிப்பால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணைவு பெற்று இயங்கும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வுத் தேதிகள் 22ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 23 கல்லூரிகள் நீங்கலாக மீதமுள்ள கல்லூரிகளில்  செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது (குறிப்பிட்ட 23 கல்லூரிகளின் தேர்வு கோடு எண்: 8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 828, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124, 9126).  இந்நிலையில் வரும் 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று இயங்கும் எல்லா இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி