டிச.5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறை மாறுது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2018

டிச.5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறை மாறுதுவரி ஏய்ப்பை தடுப்பதற்காக வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்து வருமான வரித்துறை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி, ஓர் நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள், பான் கார்டு எண்ணுடன் அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓர் நிதியாண்டில் அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதி வரையில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் பான் கார்டு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒருவர், ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவராக இருந்தால், அவரிடம் பான் கார்டு எண் இல்லை என்றால், அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதிக்கு முன்பாக பான் கார்டு எண் பெறுவது கட்டாயம். வருமான வரி சட்டம் 1962ன் புதிய திருத்த விதிகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

* இந்தபுதிய வருமான வரி விதிமுறைகள், இதுபோன்ற நிதி பரிவர்த்தனைகளில் தொடர்பில்லாத வருமான வரி செலுத்தும் தனி நபரைக் குறிப்பிடவில்லை.

* மேலாண்மை இயக்குநர், இயக்குநர், பங்குதாரர், டிரஸ்டி, பொறுப்பாளர், நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி அல்லது தொழில் நிறுவனத்தின் அலுவலக நிர்வாகி ஆகியோர், புதிய வருமான வரி விதிகளின்படி, பான் கார்டு எண் இல்லை என்றால் அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பான் கார்டு எண் பெறுவது கட்டாயம்.

* ஒரு நிதியாண்டில் பண பரிவர்த்தனை ரூ.5 லட்டத்திற்கு அதிகமாக இல்லை என்றாலும் இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் பான் கார்டு எண் பெற வேண்டும். அப்போதுதான், பண பரிவர்த்தனையை வருமான வரித்துறை எளிதாக பார்வையிட முடியும். இதன் மூலம் முறையான வரி விதிப்புக்கும் வரி ஏய்ப்பையும் தடுக்க முடியும் என்று வரி துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

* தேவைக்கேற்ப விதிமுறைகளை வருமான வரித்துறை அவ்வப்போது மாற்றி வருகிறது. பான் கார்டு விண்ணப்பிக்க தந்தை பெயர் குறிப்பிடுவது கட்டாயம். ஆனால் கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான் கார்டு விண்ணப்ப படிவத்தில் தந்தையின் பெயரை குறிப்பிட தேவையில்லை இதுவும் அடுத்த மாதம் 5ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி