அரசு ஆசிரியர்கள் நிம்மதி - kalviseithi

Nov 30, 2018

அரசு ஆசிரியர்கள் நிம்மதி


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு கூட மானியம் ஒதுக்கப்பட்டதால், 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி ஒருங்கிணைக்கப்பட்டு 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம்' 2018-19 முதல் செயல்படுத்தப்பட்டது.இத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளி மானியமாக 31,266 அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு 97 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரைவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது.

இதில் 15 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே மானியம் வழங்க செப்டம்பரில் ஒப்புதல் கிடைத்தது. இதனால் 28,263 பள்ளிகளுக்கே 89 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் 15 முதல் 100 மாணவர்கள் பயிலும் 21,378 பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், 101 முதல் 250 பேர் பயிலும் 6,167 பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய், 251 முதல் ஆயிரம் பேர் வரை பயிலும் 714 பள்ளிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய், ஆயிரம் பேர் மேல் பயிலும் 4 பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டன.15 மாணவர்களுக்கு கீழேயுள்ள 3,003 பள்ளிகள் மானியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டன.

தற்போது ஒன்று முதல் 14 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதனால் 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒதுக்கவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி