பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்தரவின்படி நீட் தேர்விற்கு தகுதியான மாணவர்களை ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும். - kalviseithi

Nov 29, 2018

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்தரவின்படி நீட் தேர்விற்கு தகுதியான மாணவர்களை ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்தரவின்படி நீட் தேர்விற்கு தகுதியான மாணவர்களை ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தல்.

   புதுக்கோட்டை,நவ,29-           புதுக்கோட்டை மாவட்டத்தில்   உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் நீட்,ஜே.இ.இ எழுத தகுதியுள்ள அனைத்து மாணவர்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது சம்பந்தமாக மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமைதாங்கி பேசும்போது கூறியதாவது:

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் நீட்,ஜே.இ.இ தேர்வு எழுத தகுதியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்றைக்குள் 29-11-2018(வியாழக்கிழமை)ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவேற்றம் செய்து அறிக்கையினை முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு  வழங்கிடவேண்டும். நீட்,ஜே.இ.இ தேர்வு எழுதும் மாணவர்களின் நலன்கருதி தலைமையாசிரியர்கள் இதில் தனிக்கவனம் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி