மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வுத்துறை அலுவலகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2018

மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வுத்துறை அலுவலகம்


மாணவர்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை  அலுவலகங்கள் திறக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கிறது.

இதுதவிர 8ம் வகுப்பு தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு என 40 தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் தவிர தனித்தேர்வர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க வசதி இருந்தாலும் சில நேரங்களில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

தேர்வுத்துறை சார்ந்த பணிகளுக்கான பிற மாவட்ட மாணவர்கள் சென்னைக்கும், நீண்ட தொலைவில் உள்ள மணடல  அலுவலகங்களுக்கும் சென்று வருவதை தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறையின் அலுவலகங்களை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அலுவலகங்கள் செயல்படத் தொடங்கும். இந்த அலுவலகங்களுக்கு அதிகாரிகளாக உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி