அரசு வாகனங்களில் அவசர கால பட்டன் ஜனவரி முதல் கட்டாயமாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2018

அரசு வாகனங்களில் அவசர கால பட்டன் ஜனவரி முதல் கட்டாயமாகிறதுஅனைத்து மாநிலங்களிலும், 2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர கால பட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்துவதுகட்டாயம் ஆகிறது.

டில்லியில், 2012ல், ஓடும் பஸ்சில், கல்லுாரி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தார். பாதுகாப்புஇது தொடர்பான வழக்கில், பொதுமக்கள் பயன்படுத்தும், பொதுத்துறை வாகனங்களில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அரசு பஸ்களில், கண்காணிப்பு கேமரா; பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி; அவசரகால பட்டன்கள் போன்றவை பொருத்தப்படும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்தது.இதன்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், அக்., 31ல், இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளது. அதில், அனைத்து மாநிலங்கள் மற்றும், யூனியன் பிரதேசங்களில்,2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர காலபட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகளை, கட்டாயம் பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் இந்த உத்தரவு, பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். அச்சுறுத்தல் ஏற்படும் போது, பஸ்களில் பொருத்தப்படும் அவசர கால பட்டன்களை அவர்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். பஸ்சில் உள்ள, ஜி.பி.எஸ்., கருவிஉதவியால், பஸ் செல்லும் இடத்தை, போலீசார் கண்டறிவர்.கண்காணிப்புபஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வழியே, அங்கு நடக்கும் குற்றங்களையும், குற்றவாளிகளையும், காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில், நேரடி காட்சிகளாக பார்க்க முடியும். மேலும், பஸ், வேறு பாதையில் கடத்தப்பட்டாலும், கண்டுபிடிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி