மாணவர்கள் இல்லாத பள்ளியை மூட முடிவு - ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்ய முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2018

மாணவர்கள் இல்லாத பள்ளியை மூட முடிவு - ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்ய முடிவு


வால்பாறை அருகே, மாணவர்களே இல்லாத பள்ளியில், தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்.

கோவை மாவட்டம், வால்பாறை ஒன்றியம், சின்னக்கல்லாரில், ஆதிதிராவிடர் அரசு நலப் பள்ளி, 1943ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, இந்தப் பள்ளியில், ஒரே ஒரு மாணவிக்காக, ஒரு தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றினர். அந்த மாணவி, இந்த கல்வியாண்டில் சின்கோனா இரண்டாம் பிரிவு அரசு நலப் பள்ளியில்,நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

இருந்த ஒரே மாணவியும், வேறு பள்ளிக்கு சென்ற நிலையில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என இருவர் மட்டும், தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவர்களை, தேவை இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யாததால், அரசுக்கு பலலட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தி கூறுகையில், ''மாணவர்கள் இல்லாததால், பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம்.

ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்வதுகுறித்து, கல்வித் துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியை நிரந்தரமாக மூடுவது குறித்து, சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி