பொதுத்தேர்வு வினாத்தாள் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

பொதுத்தேர்வு வினாத்தாள் தயார்


பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவு செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், பிளஸ் 1 தேர்வை பொறுத்தவரை, மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும். 10ம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அந்த மதிப்பெண் படி, பிளஸ், 1ல் உரிய பாட பிரிவுககளைப் பெற முடியும்.பிளஸ் 2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், உயர்கல்விக்கு செல்ல முடியும்.நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் பணி முடிவுக்கு வந்துஉள்ளது. இனி, தனி தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவுகள் துவங்க உள்ளன.இந்த ஆண்டு முதல், தனி தேர்வர்களுக்கு மார்ச் மற்றும் ஜூனில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது. அக்டோபர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான, வினாத்தாள் பட்டியலை, அரசு தேர்வு துறை தயாரித்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்கள், பாட வாரியாக வினாத்தாள்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.ஒவ்வொரு பாடத்திற்குள், 10க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள வினாக்களை எடுத்தோ அல்லது ஏதாவது ஒரு வினாத்தாளையோ, தேர்வு துறை இறுதி செய்யும்.இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, அவை, அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரை, மிக கடினமான கேள்விகள் இன்றி, மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெறும் என, தெரிகிறது.மாணவர்களை பொறுத்தவரை, புத்தகத்தில் உள்ள மாதிரி கேள்விகள் மற்றும், பாடத்தின் பின்பக்க கேள்விகளை மட்டுமின்றி, பாடங்களின் அனைத்து அம்சங்களையும் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏனெனில், பாடங்களின் எந்த பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும் என, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி