புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம்: மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2018

புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம்: மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும்

புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம்:
மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும்," என முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார் மதுரையில் ஒருங்கிணைந்த இடைநிலை கல்வி (எஸ்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மாநில அளவிலான கற்றல்மேம்பாடு அடைதல் குறித்த பயிலரங்கை துவக்கி வைத்து அவர் பேசுகையில், "புரிந்து படிக்கும் திறனை மாணவர் பெற்றால் தான் கல்வி பயனுள்ளதாக இருக்கும்அதற்கான கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர் வகுப்பறைகளில் கையாள வேண்டும். மாணவருக்குள் மறைந்துள்ள திறமையை வெளிக்கொணர வேண்டும்," என்றார்.

70 முதுநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் குழு மனப்பான்மை, புரிந்து படித்தல், பங்கேற்க செய்தல், கணிதத்தில் தீர்வு காணுதலை கற்பித்தல் குறித்து திட்ட ஆலோசகர் அய்யராஜூ விளக்கினார். உதவி திட்ட அலுவலர் ஜான் ஏற்பாடு செய்தார். ஜன.,21 வரை இப்பயிலரங்கு நடக்கிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி