அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2018

அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்


அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை தற்போது 4 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். மேலும் அவர்களது தேவைக்கு ஏற்பஉதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சில இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைக்காக ஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவது என்பது வேறு, அரசாணையை எரிப்பது என்பது வேறு. அரசு சார்பிலும் அரசாணையை எரித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பெற்றோருக்குப்பின் பராமரிக்க, காப்பகம் தேவை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, விரைவில் அனுமதி பெற்று  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி