வனவர், வனக்காப்பாளர் பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மைய விவரம் இமெயில், எஸ்எம்எஸ்சில் அனுப்ப ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

வனவர், வனக்காப்பாளர் பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மைய விவரம் இமெயில், எஸ்எம்எஸ்சில் அனுப்ப ஏற்பாடு


வனவர், வனக்காப்பாளர் பணிக்கு எழுத்து தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு இ.மெயில், எஸ்எம்எஸ்சில் தேர்வு மைய விவரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்பேரில், லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், வனவர் பணிக்கான ஆன்லைன் எழுத்து தேர்வு வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரையும், வனக்காப்பாளர் பணிக்கான ஆன்லைன் எழுத்து தேர்வு வரும் 10, 11ம் தேதிகளிலும் நடக்கிறது. மாநிலம் முழுவதும் தேர்வு மையத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கத்தை விண்ணப்பதாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஹால்டிக்கெட்டுகளில் தேர்வு எழுதும் மாவட்டம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு மைய விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு நாளுக்கு 3 நாட்களுக்கு முன், தேர்வு மைய விவரத்தை விண்ணப்பதாரரின் இமெயில் முகவரி மற்றும் செல்போனுக்கு எஸ்எம்எஸ்., (குறுஞ்செய்தி) ஆக தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர். வரும் 6ம் தேதி நடக்கும் வனவர் பணிக்கான எழுத்து தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு இன்றும் (3ம் தேதி), 7ம் தேதி தேர்வெழுதுவோருக்கு நாளையும் (4ம் தேதி), 8ம் தேதி தேர்வெழுதுவோருக்கு 5ம் தேதியும், 9ம் தேதி தேர்வெழுதுவோருக்கு 6ம் தேதியும் தேர்வு மைய விவரம் தெரிவிக்கப்படும். வனக்காப்பாளருக்கான 10ம் தேதி தேர்வெழுதுவோர்களுக்கு 7ம் தேதியும், 11ம் தேதி தேர்வெழுதுவோர்களுக்கு 8ம் தேதியும் தேர்வு மைய விவரம் தெரிவிக்கப்படவுள்ளது. ஒருவேளை, விண்ணப்பதாரர்களுக்கு இமெயில், எஸ்எம்எஸ் வரவில்லை என்றால், ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தொடர்பில் உள்நுழைந்து (பதிவு எண், கடவு சொல்லை பயன்படுத்தலாம்) தேர்வு மைய விவரம் மற்றும் முகவரியை பார்த்துக்கொள்ளலாம் என தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி