4-வது நாளாக தொடரும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்; அடுத்தகட்ட போராட்டம் குறித்து 28-ம் தேதி மதுரையில் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2019

4-வது நாளாக தொடரும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்; அடுத்தகட்ட போராட்டம் குறித்து 28-ம் தேதி மதுரையில் அறிவிப்பு



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது. தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து 28-ம் தேதி மதுரையில் அறிவிக்கப்படும் என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். அதுவரை அரசு தங்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள 256 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் நாளான நேற்று, அரசு ஊரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கின. சென்னை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு நேற்று முன்தினம் மாலை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும், ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் திட்டமிட்டப்படி காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தம் போராட்டம் தொடர்கிறது.

மூன்றாது நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்ட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்சன் நிருபர்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறோம்.

போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி அரசு சதி திட்டத்தை தீட்டி வருகிறது. நியாயமான 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். சென்னை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் மதுரை உயர் நீதிமன்ற கிளை எங்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. ஒரே நாளில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டது இது முதல்முறை. எனவே அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

2 comments:

  1. இத்தனை வருசமா டெட் பாஸ் பண்ணவங்கள கண்ணுக்கு தெரியல. இப்போதான் தெரியுதோ? எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம். எங்களுக்கு 7 வருசம் முடியப்போகுது. மறுபடியும் நாங்க படிச்சு வந்து வெயிட் பண்ணனும். இது தான் பொலப்பாட? நீ வரி எல்லா வகையிலயும் வசூலிச்சுட்டு அந்த வரி யில விழா கொண்டாடுறதும் போஸ்டிங் எல்லாம் தற்காலிகமா போட்டு நிதி பற்றாக்குறை ன்னு சொல்லிட்டு கோடி கோடி ன்னு அங்கங்க பிடி படுறதும் தமிழ்நாடு தலையெழுத்தையும் இளைஞர்களின் தலையெழுத்தையும் கெடுக்குறீங்க....

    ReplyDelete
  2. போராட்டம் ஏன்? பொதுமக்களுக்கு உண்மையை உரக்கச்சொல்லுங்கள்!!!
    உண்மையான சிக்கல் தான் என்ன ?
    CPS திட்டத்தில் - 17 வருடமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ 50,000 கோடி ஊழியர்களின் சேமிப்பு பணம் காணவில்லை.

    17 வருடத்தில் உயிரிழந்த ஊழியர்களின் 1 ரூ கூட தன் சேமிப்பை பெற இயலாத குடும்பங்களின் கண்ணீர் கூறும் CPS ன் அவல நிலையை ...
    கடந்த 8 மாதங்களில் 9000 அரசு துறை பணியிடங்கள் நீக்கம்...
    LKG , UKG பள்ளிகளில் சேர மாண்டேஸ்வரி மழலையர் படிப்பினை படித்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கலாம். இருப்பவர்களை வைத்தே நிரவல் செய்வது - வேலை பளுவை தருமே தவிர _ கல்வி சூழலை மீட்க போவதில்லை.
    ஆங்கில மீடியம் என்ற பெயரில் துவங்கப்பட்டு - ஆசிரியர்கள் நியமிக்காமல் இருப்பவர்களை வைத்து ஈடுகட்ட எப்படி தரம் உயரும் .
    தனியாரகத்தில் துவக்க பள்ளியில் 5 வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 7 ஆசிரியர்கள் உள்ளனர்.
    இங்கோ ஓராசியர் பள்ளிகள் கூட உள்ளன.5 வகுப்புகளுக்கு 25 பாடத்திற்கு - 2 ஆசிரியர் எப்படி தரம் உயரும் .
    தனியார் பள்ளிகளில் 25% அதாவது ஏறத்தாழ 40 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் மாணவர்கள் அரசு ஊக்குவிப்பு கல்வி வழங்கும் - எனில் அரசுப் பள்ளிகள் குறைப்பு யார் தவறு.
    இந்த கோரிக்கைகள் மீடியா கூட மறைத்து சம்பளம் உயர்த்த போராடுவதாக போலி முகமூடி பூசுவது - ஜனநாயக மறுப்பு அரசியல் .
    கல்வியை அரசு கையில் எடுக்கட்டும். முழுவதும் அரசு மையம் ஆகட்டும். தரத்தை கூட்டட்டும்.அரசு பள்ளி மாணவர் திறன் கூட்டட்டும் . இதற்காக எல்லா முயற்சியிலும் பயிற்சியிலும் பங்கேற்க விருப்பமே.
    இங்கு மண்டி கிடக்கும் நடைமுறை சிக்கல்களை களத்தில் இறங்கி தீர்வு காண வேண்டும்.
    அரசு பாடகசாலைகள் மீட்டெடுக்க முயலாமல் - பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் மறைக்க முயல்வது சமூகத்தை மூடராக்கும் செயல்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி