தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2019

தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்


*தமிழக அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையில்,   சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து  சமூக நலத்துறை ஆய்வு நடத்தியுள்ளது.ஆய்வின் முடிவில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில், இருபத்து ஐந்துக்கும்குறைவான மாணவர்களே படித்து வருவது தெரியவந்துள்ளது.

* குறைவான மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள்  படித்து வருகின்றனர்.

* இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் வேலூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளன. சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை மாவட்டங்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதி அமைந்துள்ள ஈரோடு மாவட்டம், எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 355 அரசுபள்ளிகள் குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

* சென்னையில், 55 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர்.  இந்த முடிவுகள் அனைத்தும்சமூகநலத்துறை மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

2 comments:

  1. அனைத்து பள்ளிகளையும் தனியாருக்கு விட்டுவிட்டு syllabus, bookக்யையும் அரசாங்கம் விடட்டும் வேனால் paper valueக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்ளலாம். பிரச்சினை முடந்துவிடும்......

    ReplyDelete
  2. Tamilnattaye thirumbi pakka vaitha engal mikeomania amaichar valha.... Aatchi mudiyum podhu tamil nattil oru goverhgove school kuda irukkathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி