பணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மணி வரை அவகாசம்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு - kalviseithi

Jan 29, 2019

பணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மணி வரை அவகாசம்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு


வேலை நிறுத்தப் போராட்டத்தைக்  கைவிட்டு பணிக்குத்  திரும்பும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:-ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் கடந்த 22-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவுகள் ஏதும் பெறாத நிலையில்,  பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்- அப் மூலம்...

அவ்வாறு வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதற்கு விரும்பும்  ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும்,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும்.  நேரிலோ,  தொலைபேசி மூலமாகவோ,குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.),  வாட்ஸ்-அப்  மூலமாகவோ தகவல் தெரிவித்து விட்டு உடனடியாக தங்கள் பணியிடத்தில் சேர்ந்து பணியைத் தொடரலாம்.இந்தத் தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்:

அவ்வாறு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆசிரியர்கள் பணியில் சேரவில்லையெனில்,  அந்தப் பணியிடங்கள் ஏற்கெனவே அறிவித்தவாறு காலிப் பணியிடமாக அறிவிக்கப்பட்டு அந்தப் பணியிடங்களைத்   தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்

2 comments:

  1. Bcoz of strike, public loose confident with Govt schools. Govt consider govt staffs request, atlist govt give assure for 3 - 4 out of 9.

    ReplyDelete
  2. 8.30மணிக்கே நிறையபேர் "உள்ளேன் ஐயா"வாமே... தல எடப்பாடிக்கு தில்ல பாத்தியா...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி