மாணவர்கள் 'தெர்மாக்கோல்' பயன்படுத்த தடை - kalviseithi

Jan 2, 2019

மாணவர்கள் 'தெர்மாக்கோல்' பயன்படுத்த தடை


பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 'தெர்மாக்கோல்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று முதல், பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலித்தீன், பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உட்பட, மொத்தம், 14 வகை பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது. தடையை மீறி பிளாஸ்டிக்பயன்பாடு உள்ளதா என, உள்ளாட்சி அமைப்புகள் வழியாககண்காணிக்கப்படுகிறது.

இந்த தடைப்படி, எளிதில் மக்காத தெர்மக்கோல் அட்டைகளையும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள், கல்லுாரிகளில், பாடங்களின் செய்முறை பயிற்சிகளுக்கு, தெர்மாக்கோல் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆர்கிடெக்ட் படிக்கும் மாணவர்களுக்கு, தெர்மாக்கோல் அதிகம் பயன்படுகிறது.தற்போது தடை சட்டம் அமலாகியுள்ளதால், வரும் நாட்களில், பள்ளி, கல்லுாரிகளின் செய்முறை திட்டங்களுக்கு, கனத்த காகிதம், தடிமனான அட்டைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், பள்ளிகளின் செய்முறை பயிற்சிகளுக்கு மட்டும், தெர்மாக்கோல் பயன்பாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க, ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தெளிவான வழிகாட்டுதல் தேவை என, கல்வி நிறுவனங்கள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது.அதேநேரம், தெர்மாக்கோலுக்கு விலக்கு அளித்தால், அந்த சலுகையை, அலங்கார பொருட்களுக்கான வணிக பயன்பாட்டுக்கு, தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி