தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும்: பள்ளிக்கல்வித் துறை திடீர் முடிவு - kalviseithi

Jan 28, 2019

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும்: பள்ளிக்கல்வித் துறை திடீர் முடிவு


தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை திடீரென அறிவித்துள்ளது.

ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பழை ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பின்கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்குத் திரும்ப வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. இதேபோன்று மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசு பல முறை வலியுறுத்தியது. இருப்பினும் இந்த அறிவுறுத்தல்களுக்கு ஆசிரியர்கள் செவிசாய்க்கவில்லை.

இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் உடனடியாக இன்று திங்கள்கிழமை பணியில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்தவித, துறை சார்ந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்கள் பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே பணியேற்கலாம். மாறாக அன்றைய தினம் முடிவில் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகக் கருதப்பட்டு, உத்தேச காலிப் பணியிடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பி.எட். பட்டதாரிகள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அரசின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காத ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்ட ஆசிரியர்கள் திரும்பி வருவதற்காக இன்று மாலை வரை காத்திருக்க திட்டமிட்டுள்ளதால், தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நியமனம் இன்று இல்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை முதல் துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

23 comments:

 1. ஐ எனக்கு goverment job, goverment job ,gov government job,gov government job,.ஐ jolly......

  ReplyDelete
 2. iyyooo.. ye paiththiyam muththiducha!!..

  ReplyDelete
 3. ஒழுக்கமா exam வெச்சி வேலை போட துப்புல்ல....இவிங்க வேலை கொடுக்கறாங்ளாம வேலை த்தூ.......

  ReplyDelete
 4. Yarum join pannathinga...mutriloom waste....ivanuga tho...Coolio managed nayenga gr8.......

  ReplyDelete
 5. Replies
  1. Salary illa,,waste time permanent panna matanga ..cheating govt..

   Delete
  2. அதற்கும் நிதி இல்லை. கூவத்தூரில் தமிழக வளர்ச்சிக்காக முதலீடு செய்துவிட்டோம்.

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Already 82000 per pass panni velai kidaikama mana ulaichala irukom ithula temparay post ah yar ketanga

  ReplyDelete
 8. Already 82000 per pass panni velai kidaikama mana ulaichala irukom ithula temparay post ah yar ketanga

  ReplyDelete
 9. nammpi pogatheanga permanantum kidayathu sampaklamum ippathukulla varathu

  arasana nambi purusana vituratheanga

  ReplyDelete
 10. We have studied many degree.but i did nit get job. I am expecting govt job . But govt nit planed to give job so donot expect others work private

  ReplyDelete
 11. So all B.Ed qulaified candidates work peivate

  ReplyDelete
 12. இதுவரை ம்ற்றவர்களை( tntet,) தினம் ஒர் அறிவிப்பை சொல்லி பைத்தியமாக்கியவர்.இப்பொழுது பைத்தியமாகிட்டார்

  ReplyDelete
 13. தற்காலிக பணியிடம்? எத்தனை நாட்களுக்கு? ஊதியம் எப்படி? குறைந்தது ஒரு மாத ஊதியம் வழங்கப்படுமா? இல்லை அந்த பத்தாயிரம் வாங்க நாம் போராட வேண்டுமா?

  நாம் பணியில் சேர்ந்தால் மாணவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அவர்கள் நம்மை நிராகரித்தால் என்ன செய்ய?

  இப்போதே மாணவர்கள் தற்காலிக பணியிடத்தை எதிர்த்து போராட ஆரம்பித்துள்ளனர்

  ReplyDelete
 14. Already TET passed candidates Morethan 80000 then, they should call that candidates for permanent job. Filling temporary teachers is totally time waste.

  ReplyDelete
 15. Frds temporary job ku yaarum pogathinga. Tet pass pannavanga apply pannathinga.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி