தூத்துக்குடி அருகே பள்ளியை திறக்ககோரி மாணவன் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2019

தூத்துக்குடி அருகே பள்ளியை திறக்ககோரி மாணவன் போராட்டம்



தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பள்ளியை திறக்க கோரி மாணவன்  போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்ேடா-ஜியோ சார்பில், நேற்று 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் பல பள்ளிகள் மூடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியை திறக்க வலியுறுத்தி, அப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தனக்குமார் (14) பள்ளி முன்பு கோரிக்கை அடங்கிய பதாகையுடன் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதில் தமிழக அரசை கண்டித்தும், பள்ளிகளை உடனே திறக்காவிட்டால் சாகும்வரை போராட்டம் நடத்தப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. விளாத்திகுளம் தாலுகா ஜெகவீரபாண்டியபுரத்தை சேர்ந்த சந்திரன் மகனான இவர், உறவினர் வீட்டில் தங்கியிருந்து படித்து வருகிறார். தகவலறிந்து ஓட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ் மற்றும் போலீசார் வந்து மாணவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

9 comments:

  1. உண்மையா அல்லது செட்டப்பா

    ReplyDelete
  2. School leave விட்டதுக்கு, மாணவன் போராட்டம்.

    கொஞ்சமாவது நம்புற மாதிரி செட் அப் பண்ணுங்கடா..

    ஒரு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு.. அது மாதிரி போடுங்க.. அப்போ தான் மக்கள் நம்புவாங்க

    ReplyDelete
  3. நீங்க பண்ணா போறாட்டம் நாங்க ஏதாச்சும் பண்ணா செட்டப்பு போ......

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் என்றால் நியாயமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றவரை விரக்தியில் சிலர் இயலாமையில் பலர் இந்த நிலையில் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்....அந்த வகையில் நாங்களா???

      Delete
  4. Vaitherichal Groups. Mudija padichu govt velai vangu. vaitherichal padathey.

    ReplyDelete
    Replies
    1. Very good ...But somebody's talk useless so don't tell our barrier they can't understand our problem .They problem only how teacher get freedom her society...

      Delete
    2. ஆசிரியர்களுக்கு இந்த சம்பளம் போதும். நிதியில்லையென்று எத்தனையோ பேர் டெட் Exam எழுதி காத்துயிருக்கின்றனர். அஅவர்களும் வேலையில் அமரடுமே என் தகப்பனாரும் ஆசிரியர்தான் சம்பளத்துக்காவேலையை செய்ய வில்லை மாணவர்கள்காக வேலையை செய்தார். இப்போது உள்ள ஆசிரியர்கள் சம்பத்தையே குறிக்கோள் வைத்துயிருந்தால்
      அரசு பள்ளி மாணவர்களை எப்படி 100% மார்க் எடுக்க வைத்துயிருக்கீர்கள்.அதுவும் இல்லை ஆனால் சம்பளம் மட்டும் வேண்டும்.

      Delete
    3. ஆசிரியர்களுக்கு இந்த சம்பளம் போதும். நிதியில்லையென்று எத்தனையோ பேர் டெட் Exam எழுதி காத்துயிருக்கின்றனர். அஅவர்களும் வேலையில் அமரடுமே என் தகப்பனாரும் ஆசிரியர்தான் சம்பளத்துக்காவேலையை செய்ய வில்லை மாணவர்கள்காக வேலையை செய்தார். இப்போது உள்ள ஆசிரியர்கள் சம்பத்தையே குறிக்கோள் வைத்துயிருந்தால்
      அரசு பள்ளி மாணவர்களை எப்படி 100% மார்க் எடுக்க வைத்துயிருக்கீர்கள்.அதுவும் இல்லை ஆனால் சம்பளம் மட்டும் வேண்டும்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி