தமிழக அரசு அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்... ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2019

தமிழக அரசு அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்... ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கோரிக்கை



ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதாக 422 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 25ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். வேலை நிறுத்தம் போராட்டத்தில் பங்கேற்ற மற்ற ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வந்தால் அவர்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக, உடனடியாக வேறு ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு பணி உத்தரவு வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேட்டியளித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதல்வர் தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். பொய்யான தகவல்களை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.  அரசியலுக்காக எங்கள் போராட்டத்தை ஜெயக்குமார் கொச்சைப்படுத்தி வருகிறார் என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். 20 ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சு நடத்த அரசு முன்வர வேண்டும் என சென்னையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேட்டியளித்துள்ளனர். இது வரை 10 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளோம், அரசு தர முன்வந்துள்ள ரூ.10000க்கும் ஆள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி