ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற ( 08.03.2019 ) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது! - kalviseithi

Feb 27, 2019

ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற ( 08.03.2019 ) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது!அறிக்கை 26.02.2019
=================
வருகின்ற மார்ச் எட்டாம் தேதி தேதி  ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது
===================

ஜாக்டோ ஜியோ நேற்று உயர்மட்ட குழு முடிவின்படி வருகின்ற 8 3 2019 அன்று  ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாலை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்

 ஏனென்று சொன்னால் கடந்த ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பள்ளிகள் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் முடங்கின. அப்போதே செவிசாய்க்காத அரசு இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் அரசின்  கவனத்தை ஈர்க்க முடியுமா? என்ற ஐயம் ஏற்படுகிறது.

 அதுமட்டுமல்லாது
மார்ச் 1 முதல் 12ஆம் வகுப்பு,  11ஆம் வகுப்பு,  10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும்,  தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தொடர்ந்து  முழு ஆண்டு தேர்வும் நடைபெற இருப்பதாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணி செய்ய இருப்பதாலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

தகவல் :

சா அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலகூட்டமைப்பு

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி