குரூப் - 1 தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2019

குரூப் - 1 தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு


குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு, மார்ச், 3ம் தேதியும், முதன்மை எழுத்து தேர்வு, மே மாதம் கடைசி வாரத்திலும் நடக்கும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.எனவே, தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் தர வேண்டும் என்பதால், முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என, உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு, முன்னர் அறிவித்தபடி, மார்ச், 3ம் தேதி நடக்கும். எனவே, விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கால அவகாசத்தை பயன்படுத்தி, புதிய தேர்வு திட்டம் மற்றும் பாடத் திட்டத்திற்கு தயாராக வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி