வினாத்தாள் மாற்றியமைப்பால் குழப்பம் - பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2019

வினாத்தாள் மாற்றியமைப்பால் குழப்பம் - பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும்


பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை தேர்வுக்கான புதிய மதிப்பெண் முறையில்  வினாத்தாளை மாற்றி அமைத்துள்ளது. இதனால் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் கலக்கத்தில் உள்ளதால், தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான வாய்ப்புகள்  உள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. இதற்காக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மாணவ, மாணவிகள் தங்களை  பொதுத்தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். கடந்த காலாண்டு, அரையாண்டு மாதிரி வினாத்தாள்களை அடிப்படையாக கொண்டு, மாணவ,  மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். தற்போது பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாள் மாற்றி  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வடிவமைப்பில் மாதிரி வினாத்தாளை பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

மாற்றி  அமைக்கப்பட்ட பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை இணையதளத்தில் பார்த்த மாணவ, மாணவிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பிளஸ் 2  தேர்வில் இம்முறை எப்படித்தான் பாஸ் ஆக போகிறோமோ என்ற புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறும்போது, ‘‘காலாண்டு,  அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள், பழைய மாதிரி வினாத்தாள்களை வைத்தே தேர்வுக்கு தயாராகி வந்தோம். தற்போது பொதுத்தேர்வுக்கு இன்னும் சில  வாரங்களே உள்ள நிலையில், புதிய மதிப்பெண் முறையிலான வினாத்தாளில் தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பது என்ன நியாயம்? இது  எங்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு எப்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெறப்போகிறோம் என்றே தெரியவில்லை” என்றனர்.

2 comments:

  1. Padichavan minister a iruntha ippadi last minute la question paper change vanthirukkuma.think and vote

    ReplyDelete
    Replies
    1. change pannurathu kalvi thurai, amaichar illa,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி