5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமைச்சரவையைக் கூட்டி முதல்வர் முடிவெடுப்பார். அதற்கு முன் யார் அறிவிப்பு வெளியிட்டாலும் கவலை வேண்டாம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2019

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமைச்சரவையைக் கூட்டி முதல்வர் முடிவெடுப்பார். அதற்கு முன் யார் அறிவிப்பு வெளியிட்டாலும் கவலை வேண்டாம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் , தேர்வுக்கு பின் வினாத்தாளை BRC மையங்களில் வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை  நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில்,

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தெரிவித்தார்.

கட்டாயத் தேர்ச்சி முறைக்குப் பதிலாக 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தலாம் என்றும் அதில் தோல்வி அடைபவர்களுக்கு உடனடி மறு தேர்வு நடத்தலாம் என்றும் மத்திய அரசு அண்மையில்அறிவுறுத்தியிருந்தது. இது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரியில் செய்தியாளர்களிடம்  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமைச்சரவையைக் கூட்டி முதல்வர் முடிவெடுப்பார். அதற்கு முன் யார் எது கூறினாலும் கவலைப்படத் தேவையில்லை என்றார்.

2 comments:

  1. mathavangala yen solura..? un naara vaayala 5&8 classku public exam nu solitu iruka..makalta ethirpu vanthathum mathavanga solra vathanthinu pulti adikiriyea unaku vekama ila..?

    ReplyDelete
  2. un naaravaayala 5&8 ku public exam neeyea sonathu ooru ulakathuku therium..makalta teachers ta irunthu ethirpu vanthiruchu so vote podamatanu nala therinchukitu apdiyea mathavanga sona vathanthinu mathavangala solriyea unaku vekama ila..?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி