51 வயதில் தேர்வு எழுதி அரசு பணியை பெற்ற சீதா..! இவர் நம்பிக்கைக்கு கிடைத்த பாராட்டு மழை..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2019

51 வயதில் தேர்வு எழுதி அரசு பணியை பெற்ற சீதா..! இவர் நம்பிக்கைக்கு கிடைத்த பாராட்டு மழை..!TNPSC தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று கலந்தாய்வுக்கு வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் 51 வயதான சீதாம்மா என்பவர்.

இது குறித்து அவர் கூறியது..!என் பெயர் சீதா, மதுரை தான் என் சொந்த ஊர். நானும் என் கணவரும் எங்கள் ஊரிலேயே டைப்ரைட்டிங் வகுப்பு நடத்தி வருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் இன்று, அரசு வேலையில் பெரிய நிலையில் உள்ளனர்அவர்கள் மீண்டும் எங்கள் வகுப்பிற்கு வந்து இனிப்பு வழங்கி அவர்கள் பயின்ற எங்கள் பயிற்சி வகுப்பை புகழ்ந்து கூறுவார்கள்.

அப்போது எனக்குள் ஒரு ஆசை வந்தது..ஏன் நாமும் இது போன்று தேர்ச்சி பெற கூடாது என... அதன் பின், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அரசு வேலை பெற தொடர்ந்து போராடி வந்தேன்.அப்போது வயது எனக்கு 40.அதன்பின் டைப்ரைட்டிங்ல முதுநிலை படித்தேன்.. பின்னர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினேன்.ஆனால் பல முறை தேர்வில் தோல்வியையே தழுவினேன்.பலரும் என்னை கிண்டல் செய்ய கூட தொடங்கினேன்.

அப்போது படித்தது வேறு. இப்போது இருப்பது வேறு.. என பலரும் என்னை இந்த முயற்சியை செய்ய விடாமல் தடுத்தனர். ஆனால் என்னுடைய கணவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்து புத்துணர்ச்சியை கொடுத்தார்.

நான் 140 கொஸ்டின் சரியாக போட்டால்கட் ஆப் 160-ஆக வரும். நான் 160எடுத்தால் கட் ஆப் 180-ஆக வரும். இது போன்று பல முயற்சிக்கு பின்பு தான், நான்  நினைத்ததை அடைந்தேன் என பெருமையாக தெரிவித்து உள்ளார்.

சீதாமாவின் முயற்சிக்கும் வெற்றிக்கும் தமிழகமக்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

21 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் அம்மா

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி எங்களுக்கு புத்துணர்ச்சி.

  ReplyDelete
 5. முயர்ச்சி உடையோர் இகழ்ச்சி அடையார்

  ReplyDelete
 6. எம் பள்ளி ஆசிரியர் இருமுறை பதிவு மூப்பு அடிப்படையில் சான்று சரிபார்ப்பு சென்று வேலை கிடைக்காமல் மீண்டும் மனம் தளராமல் தன்னுடைய 52வது வயதில்TET 2012 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு அரசு வேலை பெற்றார் இவர் திருவாரூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது 52வது வயதில் பட்டதாரி ஆசிரியராக அரசு பணியில் சேர்ந்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு பணி ஓய்வு பெறுகிறார்

  ReplyDelete
 7. உங்களின் தொடர் முயர்சிக்கான பலன் இது ,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. சீதா அம்மா ,உங்களின் வெற்றி கனியைப் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்அம்மா.

  ReplyDelete
 9. உங்களது விடாமுயற்சியை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். வாழ்துக்கள்

  ReplyDelete
 10. Very good congratulation Seethamma all the best

  ReplyDelete
 11. Congrats Mam. you are role model of youngester

  ReplyDelete
 12. god is your succed with super smart husband and family with nrelation ,friends sweet congratulations
  p.murugupandiyan

  ReplyDelete
 13. ஓ.... இதை தான் விடா மு யற்சி விஸ்வருப வெற்றி என் பார்பகலா...
  வாழ்த்துக்கள் அம்மா......

  ReplyDelete
 14. பாராட்டுக்கள் சீதா அம்மா

  ReplyDelete
 15. Congrats madam great......hard work to get govt job.....

  ReplyDelete
 16. முயற்சி + பயிற்சி = வெற்றி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி