பட்ஜெட் அறிவிப்பு, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்' -அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 10, 2019

பட்ஜெட் அறிவிப்பு, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்' -அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'


பட்ஜெட் அறிவிப்பு, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' தெரிவித்துள்ளது.

அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை:

துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சம்பள செலவினத்திற்கு, 55 ஆயிரத்து,399 கோடி ரூபாய்; ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வுக்கால பயன்கள் குறித்த செலவுக்கு, 29 ஆயிரத்து, 627 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 2019 - 20ம் ஆண்டிற்கான, மொத்த வருவாய் செலவினத்தில், 40.10 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலை நிறுத்தத்தின் போது, 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு, அரசின் மொத்த வரி வருவாயில், 71 சதவீதம் செலவிடப்படுகிறது' என, அமைச்சர் ஜெயகுமார், தவறான செய்தியை தெரிவித்து உள்ளார்.

பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு மற்றும் ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள், அரசின் பரிசீலனையில் உள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதை, ஜாக்டோ -ஜியோ அமைப்பு வரவேற்கிறது.இந்த பட்ஜெட் அறிக்கை, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7 comments:

 1. Wait for the day election ... .. Each one catch 10

  ReplyDelete
 2. Wait for the day election ... .. Each one catch 10

  ReplyDelete
 3. அரசு ஊழியர்களுக்கு மொத்தவருவாயில் 71% செலவிடுவதாக குட்டிபாப்பா அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.ஆனால் பட்ஜெட்டில் 41% செலவிடுவதாக நிதி அமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் கூறியுள்ளார்,இதுதான் உண்மையான செலவினம்.71-41=31இந்த 31% சதவிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் வாங்கிக்கொண்டு,குட்டிபாப்பா நிகழ்வுகளுக்கு கொடுப்பார் போல....

  ReplyDelete
  Replies
  1. பொய்யான தகவல் தந்ததற்காக வழக்கு தொடுக்கலாம்......

   ஆனால்......நான் மீன்வளம் தவறாக சொல்லிவிட்டேன் என்பான்......

   கோர்ட் மன்னிக்கும்......

   திட்டமிட்டு மக்களிடம் கெட்ட பெயர் வாங்க கொடுக்கப்பட்ட தவறான தகவலுக்கு வருந்துவார்கள்.........


   வருந்த வைக்க வேண்டும்.......

   Delete
 4. Romba sandhosam Da ivaga strike panapa part time teachers ah use paniga jactogeo member yelarukum part time teacher ah against ah kamichiga jactogeo geo members ah people Ku against ah kamichiga aga motham yar korikaiyum nadatha matiga parisilanai laye iruga

  ReplyDelete
 5. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB தமிழ்
  கிருஷ்ணகிரி
  Contact 9344035171

  ReplyDelete
 6. Ethuvum pannatharkku ethukku Sridhar and sithiq committee. Ethe announcement Ethan's year solluvinga parkalam

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி