என்ன செய்யப்போகிறாய்? - சிகரம் சதிஷ்குமார்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 17, 2019

என்ன செய்யப்போகிறாய்? - சிகரம் சதிஷ்குமார்!என்ன செய்யப்போகிறாய்?

வார்த்தைகள் வரவில்லை
வெட்கத்தால் , வேதனையால் வார்த்தைகள் வரவில்லை..

எல்லையில் நின்று
எங்களைக் காத்தீர்!
எல்லைக்குள்ளே உம்மை பலிகொடுத்தோமே!

நாட்டுக்குள்ளேயே நயவஞ்சகர்களிடம் உம்மை பலிகொடுத்தோமே!

வீரமரணம் என்று
வீராப்பாய்  பேசி
இந்த நாளை கடக்கமுடியவில்லை..

கண்ணுறங்கிப் படுத்தால்
போடா! சுயநலவாதி என்று
கைகொட்டிச் சிரிக்கிறது
மனச்சாட்சி..

பனியிலும், வெயிலிலும்
மழையிலும், குளிரிலும்
எல்லையில் நின்றானே!
எல்லைச்சாமியாய்..
உன்னைக் காக்க..

ஆடுகளைப் போல அவர்களை
பலிகொடுத்துவிட்டு கல்லாய் நிற்கிறாயே!
இரக்கமில்லையா உன் இதயத்தில்..

உறக்கம் வருகிறதா? உன் உதிரத்தில் என
சாட்டை எடுத்து வீசுகிறது மனச்சாட்சி...

வெட்கித் தலை குனிகிறேன் வேதனையில்..
வெறுங்கையோடு நிற்பதால்..

கழுத்தறுத்து போட்டபோதும் கையாலாகாதவராய்  கடந்து வந்தோம்..

குருவியெனச் சுட்டு வீழ்த்திய பொழுதும் குற்ற உணர்ச்சியின்றி
குனிந்து நின்றொம்.

நாட்டுக்குள்ளே புகுந்துவிட்டான்.
நாசமும் செய்துவிட்டான்.

ஆட்சியாளனே! உன்
அறிக்கை அரசியலும்
எனக்கு வேண்டாம்-
அடிமைத்தனமும் அறவே வேண்டாம்.

பிரிவினை வாதமும் வேண்டாம்- பிரித்தாளும்
சூழ்ச்சியும் வேண்டாம்.

தீவிரவாதம் தான் காரணமா?
தீவிரமாய்த் தாக்கு..
தீரும்வரை தாக்கு...

இப்பொழுதும் சொல்கிறேன்.
இதயத்தோடு சொல்கிறேன்..
கண்மூடித்தனமாக தாக்காதே!
அந்த தேசத்திலும் மக்கள் உண்டு.
எனது இலக்கு தீவிரவாதம் அழிய வேண்டுமென்பதே!

பாகிஸ்தானை  பந்தாடு என்பதல்ல நோக்கம் - பயங்கரவாதிகளை மட்டும் பந்தாடு- அதுவும்
பயம்கொள்ளும் வகையில் பந்தாடு,
பயங்கரமாய் பந்தாடு என்பதே!

ஆண்மை என்பது பிறப்பில் இல்லை
ஆளுமையில் இருக்கிறது..
ஆண்மையுள்ள அரசை எதிர்பார்க்கும் 130 கோடி மக்களில் ஒருவனாய் மண்டியிடுகிறேன்.
நியாயம் வேண்டி மன்றாடுகிறேன்..

இருந்தால் இறைவனிடம்..
இல்லையெனில் இயற்கையிடம்..

சிகரம் சதிஷ்குமார்

3 comments:

 1. Avaga kudumbathuku first 1 crore kuduga sir 20 lakhs kuduthu avaga uyir insult panadhiga motham 2 per dhana 2 crore.selavu panuga pls apadha namba mulu respect ah irukum it's my request for gov adhayum avaga wife and children's name la account la podanum pls sir.

  ReplyDelete
 2. உங்கள் வரிகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனின் மனதில் தொட்டு ஆமோதிக்கின்ற உண்மைவரிகள்......

  ஆண்மை மட்டுமின்றி மனிதமே
  வெறும் பிறப்பால் தோன்றி மடிவதில் இல்லை...

  மனிதமே ஒருவர் மற்றொரு வரை மதித்து இணக்கமாக,இன்பமாக வாழ்வதே ஆகும்...

  எந்த இடத்திலும் எப்போதும் மனசாட்சியுடன்,சிந்தித்து, பகுத்து,ஆய்ந்து
  நடந்து கொள்ள வேண்டும் என்று தான் மனிதகுலத்திற்கு சொல்லித்தரப்பட்டது,.....

  மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட இறைவனும் மனிதகுலம் அழிவதை எப்போதும் விரும்பமாட்டார் ..

  ஏன்,
  பாதுகாக்கப்படஉள்ளவர்கள்,
  பாதுகாப்பிற்கு வந்தவர்களை
  அழிக்கத்துணிகின்றான்?????????


  ஏதற்காக
  இளைஞர்களே,இளைஞர்களை இறக்கமின்றி வெறிகொண்டு அழித்துக்கொள்கிறார்கள்??????

  ஏன்
  மக்களின்
  பாதுகாப்பிற்குச்சென்றவர்களுக்கே பாதுகாப்பு இல்லை????????

  பல கேள்விகள்
  இதற்காக பதில்கள்
  ஈழத்திலும் சரி,
  காஷ்மீரிலும் சரி யார்தருவது.....

  இதற்காக பதில் மனிதத்தன்மையை இழக்காத மனிதமே சிந்தித்து தீர்வுகாண்பான் என்று நம்புவோம்...

  ReplyDelete
 3. இறந்தவர்கள் தியாகம் போற்றகூடியது, ஆனால் இறந்துபோன சுப்ரமணியம் மனைவியே இதில் தவறு நடந்துள்ளது, விசாரணை தேவை என்கிறார்.. ஆனால் விசாரணை விட்டு அடுத்த தேர்தலுக்கு ஓட்டு அரசியல் செய்கிறார்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி