வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2019

வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்


அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த அதிரடி அறிவிப்பு..!

வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு திறன் பயிற்சி அளித்து வருகிறது என்றும், வரும் கல்வி ஆண்டில் திறன் பயிற்சிக்காக 12 புதிய பாடத்திட்டம் இணைக்கப்படும் என்றும் கல்வியை முடித்தவுடன் வேலை வாய்ப்பு உத்தரவாதம் தருகிற பணியில் தமிழக அரசு ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

இது வரை இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 759 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருப்பதாகவும், மேலும், வருகிற கல்வியாண்டில் எல்கேஜி யூகேஜி வகுப்பில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு அமைதியான மாநிலம் என்றும், மின்சாரம் மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தொழில் வளம் சிறந்து அந்நியமுதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.

9 comments:

 1. Hey lusu feb 15kula tet calfr panuvomnu sonenga ila lusu ministr adha senjuta??? Next ku poita

  ReplyDelete
 2. Dai keee koooo vaaiya mooditu iruda, adikadi peati koduthu saagadikatha, sonnatha onnavathu senjayada Dev...

  ReplyDelete
 3. Next kalviyandula nega irukigala nu first paruga

  ReplyDelete
 4. Enga vitherichal unna summave vidathu

  ReplyDelete
 5. Un pillaigalukku varum enga sabam summa vidathu

  ReplyDelete
 6. Friends we all teachers,do not use bad words,conform he is real minister,

  ReplyDelete
  Replies
  1. Avlo mana ulachal la irukanga tet pass pannavanga.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி