ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 17, 2019

ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 4,200 தேர்வு  மையங்களுடன், இவ்வாண்டு 266 தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது’ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 4,200 தேர்வு  மையங்களுடன், இவ்வாண்டு 266 தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு  நடக்கும்போது தேவையான பாதுகாப்பு, கேள்வித்தாள், மதிப்பெண் வழங்கும் முறை  குறித்த விதிமுறை வெப்சைட் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளிகளிலும்  ஒட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், கேள்விகளுக்கு வழங்கப்படும் மதிப்பெண்  விவரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

கடந்த காலத்தில் 25 முதல்  30 கி.மீ. தூரமாக இருந்த தேர்வு மையங்கள் தற்போது 10 கி.மீ தூரத்துக்குள்  மாற்றப்பட்டு உள்ளது. மலை பகுதி மாணவர்கள் தேர்வு எழுத வாகனம் ஏற்பாடு செய்ய  முடியாது. ஆசிரியர் சம்பளம் மற்றும் 14 பொருட்கள் வழங்குதல் என செலவு  உள்ளது. வரியும் போடக்கூடாது, வரி இல்லாத பட்ஜெட் தேவை என்ற நிலையில்  கூடுதல் செலவினங்களை செய்ய முடியாது. கல்வித்துறைக்காக ஆண்டிற்கு 28,759  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வரி சுமை இல்லாமல் இந்த ஆண்டு  கல்வித்துறைக்கு கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு  ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

11 comments:

 1. Oh innum 1 varusathuku intha aatchi irukathu la

  ReplyDelete
 2. நிச்சயமாக நிகழும் அமைச்சரே...

  நிகழும்..

  நிகழ வேண்டும்....

  ReplyDelete
 3. Saare, innum trb annual plan varala. February 15th motinchirusi

  ReplyDelete
 4. என்ன கக்கூசு கழுவ சொல்லி கொடுக்க போறீங்களா......மண்ணாங்கட்டி.....

  ReplyDelete
 5. Totally vex...Ur words... Feburary 15 nu sollitu edumay sollala...sir....last two years

  ReplyDelete
 6. Any updates...news related pg trb,poly trb...yarukavadhu correct details tericha sollunga friends....

  ReplyDelete
 7. நம்பிக்கை கோட்டைஅண்ணா

  ReplyDelete
 8. Veetu veetuku robot kuduthu school key varavenam nu soila porigala

  ReplyDelete
 9. just wait 3 months mr.minister...ulagame ungalai kari thuppum...bed padicha & padikkaravanga vote onnukuda unga govt kidaiyathu.....

  ReplyDelete
 10. ஒரு மயிரும் புடுங்கவேனா முதல்ல pg posting போடுடா பொட்ட பாடு இத நம்பி வாழ்க்கையே போயிடும்போல இருக்கு......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி