அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்? என்று ஜாக்டோ- ஜியோ வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணையின் போது அரசின் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திலும் 71 பைசா அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வட்டிக்காக செலவிடப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின் போதும் அரசு ஊழியர், மற்றவர் இடையே இடைவெளி அதிகரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென்ற விதியை ஏன் கொண்டுவரக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் கல்லூரி படிப்பில் முன்னுரிமை தரலாமா? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்கள் தங்களது கடமையிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
அதனை அடுத்து தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக யூனியன்கள் செயல்படுவதால், நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தயங்கும் நிலை உள்ளதாகவும், யூனியன்கள் தேவையற்ற விவகாரங்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஆபத்தானது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய பிடித்தத்திற்கு பதில் விடுமுறைக் காலத்தை கழித்துக்கொள்ளலாமே என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஆசிரியர்கள் இடமாறுதலை ரத்து செய்வது குறித்து ஜாக்டோ- ஜியோ தரப்பில் இடைமனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Ethathu munnottamaga Antha judge peranai govt schools admission podalame? !
ReplyDeleteYes
DeleteWelcome
ReplyDeleteவெறும் மேம்போக்காக,ஐய்யப்பாடான கேள்விகளுடன் கடந்து போகாமல் நியாயமான தீர்வை நோக்கி நகர்த்த என்ன செய்ய வேண்டும்??????......
ReplyDeleteஉண்மை தான் நாம் நடத்தும் அரசுப்பள்ளிகளை நாம் நம்பவில்லை என்றால் வேறுயாரு நம்புவார்கள்????????
ஆனால்,
இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய து,
மாற்றம் என்பது தலைமையில் இருந்து வர வேண்டும்...
தமிழகத்தை ஆள நினைக்கும் எந்த அரசாக இருந்தாலும்,
அவர்களின் வாரிகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க உத்தரவு இடுங்கள்...
வாரிசு இல்லாத போது அவர்களின் மகன் மற்றும் மகள் வழி வாரிசுகளையோ கட்டாயம் அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்...
Very nice ,will Madurai high court judge make this decision then he is perfect, he had the eligibility to tell other s
ReplyDelete