தமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2019

தமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க திட்டம்.


தமிழக அரசுக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், விரைவில் புதிதாக 500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் 91 அரசுக் கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், 3 உடற்கல்வி கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகள், 2018-19 கல்வியாண்டு அதிகரித்த மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றால் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில் உதவி பேராசிரியர் நியமிப்பதற்கு பதிலாக, கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க கல்லூரிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நிரவல் மூலம் அரசுக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 500 கவுரவ விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள கல்லூரிக்கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அரசுக்கல்லூரி முதல்வர்கள்  கூட்டத்தில் கல்லூரிக்கல்வி இயக்ககம் சார்பில் கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் முடிவுக்கு மாற்றாக துறைத் தலைவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்க சில கல்லூரி முதல்வர்கள் திட்டமிட்டுள்ளனர்.

19 comments:

  1. apparam yenda SET.NET.PHD.nengalam job resign pannitu gust lecture ra seravendiyathaney.ennga valkiala manna poduringleyda

    ReplyDelete
  2. fully coorrepted govt.exam vache qualified staffa select pannungada

    ReplyDelete
  3. அண்ணாமலை பல்கலையில் UGC ஆல் அனுமதிக்கப்பட் பணி இடம் 750 பேராசிரியர் பணியிடம் மட்டுமே.ஆனால் 2003 க்கு பிறகு எவ்வித விளம்பரம் இல்லாமல் முறைகேடாக சுமார் 7000 பேராசிரியர் கள் சுயநிதி பிரிவில் நியமனம் செய்யப்பட்டது.அவர்களிடம் அதிமுக அரசு சிவதாஸமீனா மூலமாக பல லட்சம் பெற்றுக்கொண்டு தற்போது அவர்களுக்கு பணி நியமனம் அரசு கலை கல்லூரிகளில் நடைபெறுகின்றன.அண்ணாமலை யில் மட்டுமே எப்படி பல ஆயிரம் பேர் பேராசிரியர் பணிநியமனம் நடைபெற்றது.மேலும் இங்கு மட்டுமே சுமார் 1500 பேர் கணவர் மனைவி என ஜோடியாக பணிநியமனம் பெற்றுள்ளனர் இது என்ன முட்டாள்தனம்.எனவே இனி அரசு கல்லூரியில் பணிநியமனம் இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. EEE departmentல் மட்டும் 83 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அப்படி என்றால், அந்த 83ம் தேவையற்றோர் தானே??


      அது எப்படி ஒரு departmentல் மட்டும் 100+ பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்???

      100×25 = 2500+ மாணவர்கள் EEE departmentல் மட்டும் இருக்கிறார்களா??

      (ENGINEERING+POLYTECHNIC)

      B.E 120×4=480
      DIPLOMA 60×3=180
      M.E + Excess =200

      =860

      தோராயமாக 900 மாணவர்களுக்கு... 115 பேராசிரியர்கள் எப்படி வந்தார்கள்???

      Delete
    2. biggest scam in the history of education, even a school attender is transfered from annamalai university to govt school...

      Delete
    3. eppadi case pottu motthama ellaraiyum ulla thallurathu?

      Delete
  4. அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களால் நமக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணிகளும் பறிபோய்க் கொண்டிருக்கிறது

    ReplyDelete
  5. வயிற்றுப்புண்,வயிறு எரிச்சல் மற்றும் வாய் புண் குணமாக மிகச் சிறந்த வீட்டு வைத்திய மருத்துவ முறைகள்.https://nxttamil.blogspot.com/2019/02/best-ulcer-treatment.html

    ReplyDelete
  6. மானங்கெட்ட பொழப்புக்கு பேரு கவுரவ ஆசிரியர் வேலை...

    ReplyDelete
  7. அப்போ TRB permanent post....

    ReplyDelete
  8. TRB ல ஒரு மயிறு போஸ்ட்டிங்கும் போடமாட்டார்கள். ஏனெனில் 17000 பேர் அண்ணாமலையில் முரைகேடாக பணியில் சேர்ந்து உள்ளனர்.அதில் 700 பேர் தங்கள் மனைவி க்கும் பேராசிரியர் பணி பெற்றுக்கொடுத்துள்ளனர். சிலர்குடும்பம் குடும்பமாக பணியில் சேர்ந்து உள்ளனர்.ஒரு ஒரு பல்கலையில் எவ்வாறு இவ்வளவுபேர் பணியில் சேர முடியும்.எனவே முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை அரசு கலைக்கல்லூரி களில் நியமிக்க கூடாது.மேலும் வேறெந்த அரசு அலுவலகங்களிலும் நினமிக்கக்கூடாது.

    ReplyDelete
  9. ஒரே கிராமத்திலிருந்து 252 பேர் அண்ணாமலையில் பணியில் உள்ளனர் அதில் 47 பேர் பேராசிரியர்கள் அதிலும் ஆறு குடும்பங்களில் கணவன் மனைவி மகன் மருமகள் என குடும்ப சகிதமாக பேராசிரியர் பணி பொற்றுள்ளனர்.பணிநியமனம் இட ஒதுக்கீடு பின்பற்றாமல் அறிக்கை விளம்பரம் இல்லாமல் எப்படி நியமிக்கமுடியும்.முறைகேடு காரணமாய் அண்ணாமலையை அரசு ஏற்றால் முறைகேடாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியத்தில் அங்கேயே பணியில் அமர்ந்துங்கள் அல்லது வீட்டுக்கு அனுப்புங்கள்.

    ReplyDelete
    Replies
    1. sir, do u have enough evidence, pls if u have any sign, pls file a case, we will support u, create a whats app group regarding this

      Delete
  10. Guest lecturer job ku yaarum pogathinga frds.. . .

    ReplyDelete
  11. பணத்த வாங்குனவன் போய் சேர்ந்துட்டான், முறைகேடான பணி நியமனம் செய்த அவங்க சொத்த பறிமுதல் செய்து அரசு வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும், அல்லது பல்கலை கழகத்தால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் வேறு ஒரு பல்கலை கழகத்தில் மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும் இது எல்லாத்துக்கும் மேல் சி.பி.ஐ விசாரனை வைத்து ஊழல் முறைகேட்டை அம்பலபடுத்த வேண்டும்,,,,,,,, எவன் எப்படியோ நாடும் நாட்டு மக்களும் ...... போக ட்டும்

    ReplyDelete
  12. அண்ணாமலை ஊழியர்களால் தான் கடந்த 8 ஆண்டுகளாக அரசு கலைக்கல்லூரி , அரசு பாலிடெக்னிக் மற்றும் இதர அரசு துறைகளில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் படித்த தகுதியான பலருக்கு வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது.எனவே முறைகேடாக நியமிக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை இதர அரசு துறைகளில் நியமிப்பதற்கு எதிராக மாநில அளவில் மாவட்ட தலை நகரங்களில் ஆர்பாட்டம் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  13. அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அங்கு ஏற்கனவே சுய நிதி பாடப் பிரிவுகளில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்களை முன்னரே பணம் பெற்று, கண் துடைப்பாக பேப்பர் விளம்பரம் மற்றும் நேர் காணல் நடத்தி appointment செய்கின்றனர். விண்ணப்பித்து நேர்மையாக மற்றும் திறமையானவர்கள் பணம் மற்றும் மனம் இல்லாததால் ஒவ்வொரு முறையும் ஏமாறுவதையே தலைவிதியாக கொண்டுள்ளனர். உதாரணம், மதுரை வக்ப் போர்டு கல்லூரி, சிவகாசி, சாத்தூர் கல்லூரிகளில் சமீபத்தில் நடைபெற்ற பணி நியமனங்கள். 90 சதவீதம் முன்னரே ஆட்களை fixed செய்து பணமும் confirmed செய்த பிறகே போஸ்டிங் என அத் துறையில் நேர்மையாக பணிபுரியும் ஒரு நண்பர் வேதனைப்பட்டார். இதுதான் உயர்கல்வி நிதர்சனம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி