புதிதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் உருவாக்கம் - தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 9, 2019

புதிதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் உருவாக்கம் - தமிழக அரசு


பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.28,757.62 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் கல்விஇயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள ரூ.2,109.08 கோடி மற்றும் 1,092.22 கோடியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

ஆனாலும், மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனைக் கருதி, இத்திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்தஇரண்டு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2019-20-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். இதனை செயல்படுத்த2019-20-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.2,791 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை இந்த அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்துக்கு 2019-20-ம் ஆண்டு வரவுச்-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.248.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு 2019-20-ம் ஆண்டு வரவுச்-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

 1. கல்வி துறைக்கு அரசு பல நல்ல திட்டங்கள் வகுத்து அதனை நடைமுறை படுத்துகிறது என்பது மிக பெருமைக்குரிய விஷயம். அதே சமயம் அங்கு ( ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களின் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என்பது உள்ளபடியே வருத்தப்பட வேண்டிய விஷயம். இந்த தொகுப்பூதிய பணியாளர்களின் நிலையில் மாற்றம் ஏற்பட அவர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செய்யுமா ?

  ReplyDelete
  Replies
  1. Therinthu thaane job ku poninga. Aparam enna ippo.....

   Delete
  2. Nallathu nadakkum Sir. Don't feel.

   Delete
 2. ஏழை மக்களுக்கு தரமான இலவச கல்விய அரசு பள்ளியிலேயே குடுக்கலாமே???? எதுக்கு தனியார் பள்ளில குடுக்கணும்,

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி