தமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம் - kalviseithi

Feb 27, 2019

தமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்


திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவியின், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டுபிடிப்புக்கு, 'கூகுள்' நிறுவனம், சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அறிவியலில் ஆர்வமுடைய மாணவர்களை கண்டறிய, அவர்களின் கண்டுபிடிப்பு மற்றும் யோசனைகளுக்குமுக்கியத்துவம் வழங்க, 'கூகுள்' நிறுவனம், அவ்வப்போது ஆன்லைனில், அறிவியல் சார்ந்த போட்டிகளை நடத்துகிறது.

கடந்தாண்டு, டிச., மாதம் நடந்த போட்டியில், திருப்பூர், மேட்டுப்பாளையம்மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் ஊக்குவிப்பில், அப்பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவி தர்ஷினி பங்கேற்றார். இவர், 'ஏ.டி.எம்., மிஷின்களில் ரூபாய் நோட்டு வருவது போன்று, சில்லரை நாணயங்களை தருவிக்கும் வகையில், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டறிந்தார்.

இது தொடர்பான, வீடியோ பதிவுகளை, கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தார். இம்முயற்சிக்கு, கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்து, சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன், 'உங்கள் யோசனையை உலகுக்கு தெரிவித்தமைக்கு நன்றி' எனவும் தெரிவித்துள்ளது.

16 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி