TNPSC - பாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றம் எதிரொலி ஜூலையில் குரூப் 1 மெயின் தேர்வு - அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2019

TNPSC - பாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றம் எதிரொலி ஜூலையில் குரூப் 1 மெயின் தேர்வு - அறிவிப்பு!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1ல் அடங்கிய பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதற்கான முதனிலை தேர்வு( மார்ச் 3ம் தேதி நடைபெறும்.

முதன்மை (மெயின்) எழுத்து தேர்வு மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை எழுத்து தேர்விற்கான பாட திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதன்மை எழுத்து தேர்விற்கான Scheme and Syllabus ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பதாரருக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என உத்தேசித்துள்ளது. மேலும் முதனிலை தேர்வு முன்னர் அறிவித்தவாறே மார்ச் 3ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. ஆசிரியர் காலிபணியிடம் விரைவில் நிரப்பப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் (ஆனால் வழக்கு முடிந்தவுடன்) தி மு க எம் எல் ஏ பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    ReplyDelete
    Replies
    1. valakuku yar ethu kaaranam nu elarukumea therium..Tamil natil valangungira peyaril, malupalil teachers niyamanam iluthadipu avalam miga periya oru kevalam..

      Delete
  2. வழக்கு முடிந்தவுடன் aahhhh... illa AATCHI mudinthavudanaaaaahhhh... konjam thelivaa sollunga amaichareyyyyyyyy...😂😂

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி