ஆர்டிஓ அலுவலகத்தை அதிர வைத்த 1-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி - கொண்டு வந்த ஒரே கடிதம்..? அடிபணிந்த அரசு அதிகாரிகள்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2019

ஆர்டிஓ அலுவலகத்தை அதிர வைத்த 1-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி - கொண்டு வந்த ஒரே கடிதம்..? அடிபணிந்த அரசு அதிகாரிகள்..!



சென்னை பொன்னேரி அருகே மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு பள்ளி கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமானநிலையில் உள்ளது.

இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைக்கு பொதுமக்கள்பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் இப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான முத்தரசி (வயது 6) நேற்று முன்தினம் காலை திடீரென பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தாள்.அவள் தனது பள்ளி மிகவும் சேதமடைந்து இருப்பதாக புகார் மனுவை ஆர்.டி.ஓ. நந்தகுமாரிடம் கொடுத்திருக்கிறார்.

6வயது குழந்தை தாமாக வந்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ. நந்தகுமார் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் கூறி அனுப்பி வைத்தார்.

இது குறித்து மாணவி கொடுத்த புகார் மனுவில்,"எங்கள் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் பழுதடைந்து உள்ளது.தரை பகுதியும் பெயர்ந்து இருக்கிறது. இதனால் மாணவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. குடிநீர் குழாய், கழிவுநீர் கால்வாய் உடைந்துமோசமான நிலையில் காணப்படுகிறது.

மேலும் பள்ளியின் பின்பக்க பகுதி மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

1 comment:

  1. Papa inga erukkura arasiyal thumaigal tasmac sariyillana udaney nadavadikkai edupanuga, eeschool enral ennavengru theriyathu entha thermacool pasangal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி