உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [ விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2019 ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2019

உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [ விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2019 ]


திருச்சி மாவட்டம், துறையூர் டாப்செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டுத்திறன் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி மையத்திற்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உடற்கல்வி இயக்குநர் - 01
சம்பளம்: மாதம் ரூ. 10,000
தகுதி: இளங்கலை பட்டபடிப்புடன்ம் உடற்கல்வி பாடத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உடற்கல்வி ஆசிரியர் - 02
சம்பளம்: மாதம் ரூ. 8,000
தகுதி: உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு இளங்கலை பட்டம் மற்றும் உடற்கல்வியியல் பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வுக்குழுவால் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படும். பழங்குடியினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, துறையூர்  வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.03.2019

1 comment:

  1. Special teachers counciling date eniyum varuma posting poduvangala?
    Election rules iruku , posting order koduka mudiyuma?
    Chanses iruka sollunga🤹🤹🤹🃏🃏🃏

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி