தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள பள்ளியின் இளநிலை உதவியாளர் பணிக்கு மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டின்படி பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதி, தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் போதுமான தகவல்கள் இல்லை.
மேலும் பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி அரசின் பிற துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு 8 வார காலத்துக்குள் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தலைமைச் செயலாளர்சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி