தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு [விண்ணப்பிப்பதற்கான தேதி: 22.03.2019 முதல் 22.04.2019 வரை ] - kalviseithi

Mar 9, 2019

தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு [விண்ணப்பிப்பதற்கான தேதி: 22.03.2019 முதல் 22.04.2019 வரை ]

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் கேங்க்மேன் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள அனைவரிடமிருந்து உடற்தகுதி தேர்விற்கும், எழுத்து தேர்விற்கும் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கேங்க்மேன் (பயிற்சி)

காலியிடங்கள்: 5000

தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.gov.in என்ற இணையத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி