தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள் மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2019

தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள் மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை


தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், ஏப்., 18ல், தேர்தல் நடக்கிறது.இதற்கான கண்காணிப்பு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில், மாவட்ட தேர்தல் அதிகாரிதலைமையில், மூன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த பணியில், 24 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும், முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.தேர்தல் உயரதிகாரி, ஒருவர் கூறியதாவது:மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள் மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி வழக்குப்பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படஇருக்கிறது.

பொதுவாகவே, நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன், தேர்தல் ஆணையத்தின் கீழ் அலுவலர்கள் வந்துவிடுகின்றனர்.அதனால், உரிய விதிகளின் படி, தகுந்த காரணங்களுக்காக, தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே விடுப்பு வழங்க வழி வகை இருக்கிறது.அந்த குற்றச்செயல், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவேடில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு விடும். இதனால், அந்த அலுவலர்களின் பல்வேறு சலுகைகள்பாதிக்கப்படும்.மேலும், தீவிர விசாரணைக்கு பின், குறிப்பிட்ட அலுவலர்கள் மீதான வழக்கை ரத்து செய்யும், அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதனால், தேர்தல் அலுவலர்கள் உரிய முறையிலும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி