எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Mar 11, 2019

எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

''அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, குறைந்தது, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேரும் அளவுக்கு, வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தரமான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக, ஒரு சிறிய பள்ளி கூட மூடப்படவில்லை.

ஒரே ஒரு மாணவர் உள்ள பள்ளிகளாக, 33ம், ஒன்பதுக்கு கீழ் ஒற்றை படையில், மாணவர் எண்ணிக்கை கொண்டதாக, 1,234 பள்ளிகளும் உள்ளன. எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சு பொருக்கலன்னு சொல்லுறா மாதிரி இருக்கு.....செங்கோட்டையன் கூறும் அனைத்து பொய் அறிக்கைக்கும் நீங்கள் போடும் இந்த படம் பிரமாதம்...... இதை தொடருங்கள்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி