பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வின் தீர்ப்பை ெசயல்படுத்த வலியுறுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள் நேற்று காலை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறைகளில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை காலியாக உள்ள உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகிய சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 2017ம் ஆண்டு போட்டித் தேர்வு நடந்தது. அதில் 35 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியானது, அதைத் தொடர்ந்து சான்று சரிபார்ப்பும் நடந்தது.
அதன்பேரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணி நியமனத்துக்கான தெரிவு பட்டியலும் வெளியானது. அந்த பட்டியலில் உடற்கல்வி ஆசிரியர்கள் 532 பேர் உள்பட 1080 பேர் தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் பணி நியமனம் என்பது இன்னும் நடக்கவில்லை. இதுதொடர்பாக நான்கு முறை முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, அந்த பணி நியமனம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் நான்கு வாரங்களுக்குள் 532 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தீர்ப்பில் கூறப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் பணி நியமனம் செய்வதில் சம்பந்தப்பட்ட துறை காலதாமதம் செய்து வருகிறது.
இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர்கள் 150 பேர், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்தனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்தித்தனர். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமர்வு வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக டிஆர்பி தலைவர் தெரிவித்தார்.
இதையடுத்து, உடற்கல்வி ஆசிரியர்கள், தலைமைச் செயலகம் சென்று முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுத்தனர்.
Onnum pannamattaka
ReplyDeleteநீண்ட கால தாமதம்
ReplyDeleteCPED,DPED ,BBE 18year seniorityeil erukiraga quicka case mudithu nalla mark petrulla avarkalaiyum add seithu final list vittu counseling nadathaa vendum.state third mark eduthavar list illa,ethu periya pavam,CPED,DPED,BBE ya God Thaan kapathanum.
ReplyDeleteஉடற்கல்வித் துறையில் தமிழ் வழியில் பயின்றதாக பலர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் எந்த உடற்கல்வி கல்லூரியிலும் தமிழ் வழிக் கல்வி கிடையாது. சில கல்லூரியில் மாணவர்கள் தேர்வினை தமிழில் எழுத அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஒருவர் தமிழில் தேர்வு எளிதியதாலேயே அவர் தமிழ் வழி இட ஒதிக்கீடு கோரமுடியாது. மேலும் அவர்கள் தமிழ்வழி சான்றிதழ் சமர்பித்து இருப்பினும் அவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றில் தமிழ்வழியில் பயின்றதர்க்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே அவர் பணியில் சேர நேரிடும். ஆனால் பலர் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துவிட்டு முறைகேடாக தமிழ்வழிச் சான்றிதழ் சமர்பித்து இருப்பதாக தகவல் வந்துகொண்டு இருக்கிறது. தெரிந்தே செய்யும் தவறுக்கு கட்டாயம் தண்டனை உண்டு.
ReplyDeleteNikalum pokathiga,vera yaraiyum pokavidathiga
ReplyDeleteயார் போவது யார் வெளியேறுவது என்பது அல்ல வாதம். உண்மையாலுமே அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதே போல் தெரிந்தே குற்றம் புரிபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
ReplyDelete"குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை".
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.