தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியில் மாற்றம் வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2019

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியில் மாற்றம் வருமா?


சித்திரை திருவிழாவையொட்டி மக்களவை தேர்தல் தேதி அமைந்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் விழா தொடர்பான அறிக்கைகளை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18ம் தேதி மதுரை சித்திரை திருவிழாவின் உச்சகட்டமான மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டமும், அதே நாளில் அழகர் எதிர்சேவையும் நடைபெறுவதால் சிக்கல் எழுந்தது. தென்மாவட்டம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் கூடுவார்கள் என்பதால் தேர்தல் பாதுகாப்பு குறித்து கேள்வி கிளம்பியது.

மதுரை சித்திரை திருவிழா

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் உச்சகட்டமாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துக்கு மறுநாள் ஏப்ரல் 18ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தொடங்கும் தேரோட்டம் 4 மாசி வீதிகள் சுற்றி மீண்டும் நிலைக்கு வருவதற்கு பகல் 12 மணி வரை ஆகும். இதில் பல லட்சம் மக்கள் திரள்வார்கள். அதோடு இதே ஏப்ரல் 18ல் அழகர் எதிர்சேவையும் நடக்கிறது.

இந்த உற்சவம் அன்று அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து விடிய விடிய நடைபெற்று ஏப்ரல் 19ல் காலை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் நடைபெறும்.அழகர் எதிர்சேவை மற்றும் ஆற்றில் இறங்குவதை தரிசிக்க மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து வருவார்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவார்கள்.

மக்கள் வாக்களிப்பதில் சிக்கல் என குற்றச்சாட்டு

இதே நாளில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது, தென்மாவட்ட பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. முக்கிய திருவிழாக்கள் தேதியை மாவட்ட நிர்வாகத்தில் முன்கூட்டியே கேட்டு அறிந்து தான் தேர்தல் தேதி விவரங்கள் முடிவாகும்.  திருவிழா தேதியை மாற்ற முடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்னை எழக்கூடும் என்பதால், தேர்தல் ஆணையம் மறு ஆய்வு நடத்தி, தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும். அதே நாளில் தேர்தல் நடத்தினால் மக்கள் வாக்களிப்பதில் கடும் சிக்கல் எற்படும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

இந்நிலையில் சித்திரை திருவிழா பற்றி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தினீர்களா?
என்று மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க, சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். மேலும் சித்திரை திருவிழா தொடர்பான அறிக்கைகளை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

இதனிடையே மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தலை ஒத்திவைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி முறையீடு செய்துள்ளார். தேர்தல் நடக்கும் ஏப்.18ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நடப்பதால் மதுரை தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வைக்க  வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். 

1 comment:

  1. கிறிஸ்தவர்களின் புனித வியாழனும் இதே தினம் தான். எனவே கண்டிப்பாக தேர்தல் தேதியை மாற்றினால் நன்று.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி