NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 100% claim பெறுவது எப்படி...??? - kalviseithi

Mar 12, 2019

NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 100% claim பெறுவது எப்படி...???

தஞ்சையில் தனியார் மருத்துவமனை முழு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று நிராகரித்து, பணத்தை கட்டச் சொல்லி மிரட்டிய  பொழுதும்...


ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சிகிச்சைக்கான தொகை ரூ.2,01,781 முழுவதையும் NHIS திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையாக பெற்ற ஆசிரியர் திரு.சதீஸ்குமார் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சிப் பதிவு..
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், தளிகைவிடுதி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் சதீஸ்குமார் ஆகிய நான்,


  எனது தந்தைக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டேன்..


மருத்துவமனை நிர்வாகம் ரூ.75,600 மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது எனவே மீதமுள்ள தொகையை கட்ட வேண்டும் என்று நிர்பந்தித்த சூழலில்..


TNPTF தஞ்சை மாவட்ட பொருளாளர் திரு.மதியழகன் மற்றும் திருவோணம் TNPTF வட்டாரச் செயற்குழு உறுப்பினர் திரு.தேவராஜன் ஆகிய இருவரும் முழு காப்பீட்டுத் தொகை கிடைத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம் என்ற உறுதியுடன் அவர்கள் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாகவும், இறுதி வரை உறுதுணையுடன் உடனிருந்து, விருதுநகர் மாவட்ட TNPTF பொருளாளரும், NHIS திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு.செல்வகணேசன் அவர்களை தொடர்புகொண்டு

இரண்டாம் கட்டமாக ரூ.26,300-ம்,

மூன்றாம் கட்டமாக ரூ.99,881-ஐ பெற்று


இறுதியாக முழு மருத்துவ செலவு ரூ.2,01,781-ஐயும் காப்பீட்டுத் தொகையாக பெற்றுத் தந்தனர்..


அதுமட்டுமின்றி நான் முன் தொகையாக கட்டிய ரூ.16,944-ஐயும் திரும்ப பெற்ற பின்னரே (ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல்) மிகுந்த மன நிறைவுடன் வீடு திருப்பினேன்..


NHIS திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வை எனக்கு மட்டுமல்ல, என் மூலமாக நம் அனைவருக்கும் ஏற்படுத்திய மதியழகன், தேவராஜன் மற்றும் செல்வகணேசன் ஆகிய ஆசிரியர்களுக்கும்

NHIS திட்டத்திற்காக மாநில அளவில்  ஒருங்கிணைப்பாளர் குழுவினை நிர்வகித்துவரும் TNPTF மாநில மையத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..


***************************

"இது குறித்து ஆசிரியர் திரு.தேவராஜன் அவர்கள் கூறுகையில்..."


கட்டிய முன் பணம் 16,944-ல் ரூ.434 மதிப்பிலான கட்டண ரசீதை ஆசிரியர் சதீஸ் அவர்கள் தொலைந்துவிட்டார்..

ரசீதே கூட இல்லாமல் அந்த பணத்தையும் மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் திரும்ப வழங்கியது குறிப்பிடத்தக்கது..

மீண்டும் தொடர் சிகிச்சைக்காக எங்களிடம் தான் வர வேண்டும் எனவே மீதத்தொகையை கட்டிவிட்டு டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்று முதலில் அச்சுறுத்தும் வகையில் பேசிய மருத்துவமனை நிர்வாகம்..

இறுதியாக நமது அடுத்த கட்ட நகர்வினால் பதறிப்போய்..

நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கவில்லை என்ற ஒப்புதல் கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு நீங்கள் இதுவரை செலவு செய்த பணம் முழுவதையும் வாங்கிச் செல்லுங்கள் என்று பணிந்தது..

(இறுதியில் ஆசிரியர் சதீஸ் அவர்களுக்கு மன உளைச்சலினால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க, அவரை மருத்துவரே கட்டித் தழுவி சாப்பாடு வாங்கி வரச் சொல்கிறோம் சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் என மன்றாடிய மருத்துவமனை நிர்வாகம்)

மிரட்டும் தோனியில் பேசிய மருத்துவமனை நிர்வாகத்தை இறுதியில் பணிய வைத்த பெருமை திரு.செல்வகணேசன் அவர்களையும் TNPTF மாநில மையத்தையுமே சேரும்....

(டிஸ்சார்ஜ் ஆகாமல் மருத்துவமனையில் உறுதியுடன் இருக்கும் பொழுது மட்டுமே முழு தொகையையும் பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது)


டிஸ்சார்ஜ் ஆகிவிட்டால் வழக்கு பதிவு செய்து பெற இயலும்..
(வழக்கு பதிவு செய்து வட்டியும் ,முதலுமாக வழக்கிற்கான செலவையும் சேர்த்தே கரூரைச் சேர்ந்த ஆசிரியர் பெற்றுள்ளார்)

டிஸ்சார்ஜ் ஆன பிறகு வழக்கு பதிவு செய்த ஆசிரியருக்கு கிடைத்த தீர்ப்பில்...முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,

அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வழக்கு விபரம் அறிய கீழே சொடுக்கவும்*👇
http://www.kalviseithi.net/2019/03/nhis-100-full-claim.html?m=1
********************

நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்.

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)


01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.


அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.


ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.

(காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரீனா என்ற ஆசிரியர் விபத்தில் சிக்கி கோமாவில் இருத்தல, அவர் உச்சபச்ச காப்பீட்டுத் தொகை ரூ.7,50,000-ஐ பெற்றுள்ளார்.)

அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..


NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும் 👇
http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

************************

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்.. (அரசாணையில் 4,00,000 வரை Chas less treatment என்றே குறிப்பிடப்பட்டுள்ளது)

*************************

திருமணமான உசிலம்பட்டியைச் சேர்ந்த திரு.வீரபாண்டியன் என்ற டாஸ்மார்க் ஊழியர் தனது தந்தைக்கு NHIS மூலம் சிகிச்சை வேண்டி வழக்கு பதிவு செய்து வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.***************************
அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..👇
http://www.tn.gov.in/go_view/dept/9


New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்👇
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்👇
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx


NHIS Insurance Compliant number -   7373073730


தோழமையுடன்,
தேவராஜன்,
தஞ்சாவூர்..

44 comments:

 1. ஒரு ஆண் அரசு ஊழியர் திருமணம் ஆகும்பட்சத்தில் தனது தாய் தந்தையருக்கு இத்திட்டத்தில் சிகிச்சை பெற முடியுமா? முடியுமெனில் எவ்வகையான மருத்துவத்திற்கு இச்சலுகை பெற முடியும்... வீட்டில் தவறுதலாக கை கால் உடையும் பட்சத்தில் திட்டத்தில் சிகிச்சை பெற முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. இதற்கு முன்பு இந்த சலுகை இருந்தது..

   ஆனால் தற்பொழுதைய அரசாணையிப்படி திருமணர்திக்கு பின் பெற்றோருக்கு இதில் சிகிச்சை பெற இயலாது..

   ஆனால் டாஸ்மார்க் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தனது பெற்றோருக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.. அதை மேற்கோள் காட்டி வழக்கு பதிவு செய்து பெற இயலும்..

   Delete
  2. S.Veerapandi vs The Joint Director Of Medical And on 21 March, 2018
   BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

   DATED: 21.03.2018

   CORAM

   THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN

   W.P.(MD)No.4117 of 2018
   and
   W.M.P.(MD)No.4277 of 2018   S.Veerapandi ... Petitioner

   Vs.


   1.The Joint Director of Medical and
   Rural Health Services,
   Madurai.

   2.The Senior Regional Manager,
   Tamil Nadu State Marketing Corporation Ltd.,
   (TASMAC)
   Anna Nagar, Madurai.

   3.The District Manager,
   Tamil Nadu State Marketing Corporation Ltd.,
   (TASMAC)
   Madurai South, SIPCOT,
   Kappalur, Madurai District. ... Respondents


   PRAYER : This Petition is filed under Article 226 of the Constitution of
   India to issue a Writ of Certiorarified Mandamus, calling for the records
   pertaining to the impugned order passed by the second respondent in
   Na.Ka.No.101/2017/A1, dated 26.09.2017 in Na.Ka.No.50/2015/A, dated
   03.10.2017, quash the same and direct the respondents to reimburse a sum of
   Rs.3,56,506/- towards medical expenses incurred for the treatment of
   petitioner's father, within the time frame fixed by this Court.

   !For petitioner : Mr.R.V.Rajkumar


   ^For R1 : Mr. S.Srimathy
   Special Government Pleader

   For R2 & R3 : Mr.H.Arumugam   :ORDER
   The petitioner is working as Salesman in a liquor outlet run by TASMAC. He is a regular employee. He is a member of the Medical reimbursement scheme introduced by TASMAC. The petitioner's father underwent a Lung surgery. When a claim for reimbursement was made, it was denied on the only ground that the petitioner got married and that therefore his father cannot be a beneficiary.
   2. This ground of rejection was specifically frowned upon by this Court in W.P.(MD)No.7365 of 2010 dated 26.07.2011. Therefore the order impugned in this writ petition is quashed. The second respondent is directed to process the petitioner's medical reimbursement claim and effect settlement in terms of the scheme announced by the TASMAC for its employees. The medical reimbursement shall be done within a period of 8 weeks from the date of receipt of a copy of this order.
   3. Accordingly, this writ petition stands allowed. No costs.
   To The Joint Director of Medical and Rural Health Services, Madurai.
   .

   Delete
 2. ..‌‌.சிறப்பு...

  NHIS தொடர்பாக உரிய நேரத்தில் தக்க யோசனை வழங்க ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத்திற்கு 5பேர் கொன்ட குலு அமைக்கலாம் என்பது என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. குழு அமைப்பது நிரந்தர தீர்வாகாது.. அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை பெற உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்த போராட்டத்தை முன்னெடுப்பதே சாமானிய ஊழியனுக்கும் பயனளிப்பதாக அமையும்..

   Delete
 3. NHIS SCHEME-ரூ180 பிடித்தம் செய்வது ரூ பல்லாயிரம் கோடிகள் ஏமாற்றும் காப்பீடுத்திட்டம்.ஏமாற்றமடைவது ஆசிரியர்கள்

  ReplyDelete
  Replies
  1. இனியாவது ஏமாறாமல் இருக்க முயற்சி செய்வோம்..

   Delete
 4. விரைவில் பதிவு செய்யுங்கள்..

  ஏராளமனோர் 50% 25% மட்டுமே காப்பீடாகப் பெறுகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. நாளையே பதிவு செய்கிறேன் தோழரே..

   Delete
 5. Replies
  1. (Insurance Complaint number- 7373073730)

   nodal officer திரு.வாலகுரு (cell- 9442884340)

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. poor people ku kudukavendiyatha monthly per 60,000 thousand salary vanguravakaluku kudukarenga

  ReplyDelete
  Replies
  1. எங்களின் ஊதியத்தில் மாதம் மாதம் மருத்துவ காப்பீட்டிற்காக கோடிக்கணக்கில் பிடித்தம் செய்யப்படுகிறது..

   நாங்கள் காப்பீடு செய்திருந்தும்.. அதற்கான உரிமையை போராடி பெறவேண்டிய அவல நிலையில் உள்ளோம்..

   அப்படி இருக்கையில் தங்களின் பதிவு ஏற்புடையாத இல்லை தோழர்..

   காப்பீட்டு உரிமை தேவைப்படும் தனி நபர் யாராக இருந்தாலும் தாராளமாக காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்..

   இதில் மாத சம்பளம் பெரும் ஊழியரார் இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன..??

   Delete
 8. ஆகா அருமையான செயல்... இன்றைய கால கட்டத்திற்கு மருத்துவமனைகளின் ஏமாற்று முறைக்கு ஒரு மாபெறும் சவுக்கடி....

  ReplyDelete
 9. நான் இடைநிலை ஆசிரியர். என் கணவருக்கு கடந்த மாதம் செய்த சிகிச்சைக்கு பாதி அளவு மட்டும் claim ஆனது..மீதியுள்ள தொகையை நாங்கள் கட்டினோம் இப்போது அதை claim பண்ணலாமா?

  ReplyDelete
 10. நான் இடைநிலை ஆசிரியர். என் கணவருக்கு கடந்த மாதம் செய்த சிகிச்சைக்கு பாதி அளவு மட்டும் claim ஆனது..மீதியுள்ள தொகையை நாங்கள் கட்டினோம் இப்போது அதை claim பண்ணலாமா?

  ReplyDelete
  Replies
  1. கரூர் மாவட்டம்-கடவூர் ஒன்றியம்,எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணை வியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 . இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் அனுமதித்தது. அதற்குமேல் தர மறுத்து விட்டது.


   மாணிக்கம் சார் அவர்கள்,
   கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் தீர்ப்பு பெறப்பட்டது.


   தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும் மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


   நமது மருத்துவ செலவுகள்,அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்.ரூ.4,00,000க்குள் அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்து எனவே விழிப்புடன் இருக்கவும்.


   ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் 7,50,000 வரை காப்பீடு வழங்கப்படும்..

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. சார் எனக்கு இடது கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது 1 இலட்த்துக்கும் மேல் செலவானது ஆனால் 32000 மட்டுமேNHIS ல் இருந்து பெறப்பட்டது மீதித் தொகையை நான் பெற முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..

   கண் புரை அறுவை சிகிச்சைக்கு -25,000.

   கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு -45,000.

   இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

   அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..

   Delete
 13. அனைத்து நோய் பாதிப்புகளுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த சலுகை பெற முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..

   கண் புரை அறுவை சிகிச்சைக்கு -25,000.

   கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு -45,000.

   இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

   அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..

   Delete
 14. Ranjith Kumar loosa da nee ... Yaru 60000 vangaranga... Pathaya nee ... Enga money la nanga pay panra insurance claim panrom da vayitherichal pudicha idiot...eppa than unna mathiri ara vekkaduga thirunthum therila always engala pathi kora solla sollara dogs

  ReplyDelete
 15. Surgery pannunathan claim panna mudiuma illa ICU Vachale panalama sir

  ReplyDelete
  Replies
  1. அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..

   கண் புரை அறுவை சிகிச்சைக்கு -25,000.

   கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு -45,000.

   இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

   அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..

   Delete
 16. Sir NHIS ID card ku form anupunen innum varla enga epdi vangurathu sir

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எந்த மாவட்டம் தோழர்..

   Delete
 17. Sir enaku marriege akiduchu appaku heart operation pannanum appaku oru case ah katti nega vangalamnu sonninga atha epdi vangurathu Enna procedure sir plz sollunga sir

  ReplyDelete
 18. நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து.. வெற்றி பெற்றால் மட்டுமே சாத்தியம் தோழர்.. அந்த டாஸ்மாக் ஊழியரின் வழக்கினை மேற்கோள் காட்டி வாதாடி வெற்றி பெறலாம்..

  ReplyDelete
 19. எந்தெந்த சிகிச்சைக்கு insurance card யூஸ் பண்ணலாம்

  ReplyDelete
  Replies
  1. *New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
   http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf

   Delete
 20. நான் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.கடந்த ஆண்டு எனது கணவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமுடன் உள்ளார்.ஆனால் நமது NHIS காப்பீடு திட்டத்தில் அந்த மருத்துவமனை பெயர் இல்லை என்பதால் எனக்கு ஒரு பைசா கூட திரும்ப கிடைக்கவில்லை. கடன் வாங்கி சுமார் மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ளேன்.எனக்கு தங்களால் உதவ முடியுமா? நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? வழிகாட்டுங்கள் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. *NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

   GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

   http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

   Delete
 21. நான் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். கடந்த ஆண்டு எனது கணவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமுடன் உள்ளார்.ஆனால் நமது NHIS திட்டத்தில் அந்த மருத்துவமனை பெயர் இல்லை என்பதால் எனக்கு ஒரு பைசா கூட திரும்ப கிடைக்கவில்லை.சுமார் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து உள்ளேன்.எனக்கு தங்களால் உதவ முடியுமா? நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. இது தொடர்பாக என்ன நடவடிக்கை இதுவரை மேற்கொண்டுள்ளீர்..??

   Delete

 22. Sir appa transport la work panni retired akitaru avaruku NHIS ID card vanga mudiyuma vangalamna enga epdi vangurathu naga tirchy district sir plz guide pannunga sir

  ReplyDelete
 23. நிர்ணயக்கப்பட்ட அறுவை சிகிச்சை எது? அரசானையை தமிழில் பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

  ReplyDelete
 24. சமச்சீர் புத்தகத்தில்ஒவ்வொரு வரியில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி பதில்கள் அடங்கிய புத்தகங்கள் தமிழ் 60 ரூபாய் சமூக அறிவியல் Rs60/- அறிவியல் ரூபாய் 100 delivery charge RS50/-only contact 9994850943 cash on delivery only

  ReplyDelete
 25. சமச்சீர் புத்தகத்தில்ஒவ்வொரு வரியில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி பதில்கள் அடங்கிய புத்தகங்கள் தமிழ் 60 ரூபாய் சமூக அறிவியல் Rs60/- அறிவியல் ரூபாய் 100 delivery charge RS50/-only contact 9994850943 cash on delivery only

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி