மக்களவைத் தேர்தல் பணிகள்: ஏப்.18 வரை பள்ளிகளைத் திறந்து வைத்திருக்க உத்தரவு. - kalviseithi

Apr 12, 2019

மக்களவைத் தேர்தல் பணிகள்: ஏப்.18 வரை பள்ளிகளைத் திறந்து வைத்திருக்க உத்தரவு.


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் கண்காணிப்பு கேமராபொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ஏப்ரல் 18 வரை அனைத்து பள்ளிகளிலும் ஒரு பொறுப்பாளரை நியமித்து,  பள்ளிகளை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைந்துள்ளன.

வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-இல் முழுமையான கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கு ஏதுவாக, வரும் 18-ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும்ஒரு பொறுப்பாளரை நியமித்து, விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும்  திறந்து வைத்திருக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவுறுத்தலை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு உடனடியாக தெரியப்படுத்தி அந்தப் பள்ளிகளை கண்காணிக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி