கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் +2 தேர்வில் 8 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2019

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் +2 தேர்வில் 8 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


பிளஸ் 2 பொதுத் தேர்வில்,  நாகை மாவட்டத்தில் 8 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
நாகை மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், 8 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, புஷ்பவனம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேதாரண்யம் எஸ்.கே.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, நீடூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கஜாவை கடந்த வெற்றி...

கடந்த ஆண்டில்,  2 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதில், 6 பள்ளிகள் கஜா புயல் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளான வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி