பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி; மாணவிகள்-93.64, மாணவர்கள் 88.57 தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2019

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி; மாணவிகள்-93.64, மாணவர்கள் 88.57 தேர்ச்சி


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கணினிக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தங்கள் தேர்வு முடிவை தாங்கள் படிக்கும் பள்ளியில் பார்த்துக் கொள்ளலாம். மேலும், தேர்வு எழுத விண்ணப்பிக்கும் போது தெரிவித்த செல்போன் எண்ணுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள்  மதிப்பெண்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

தனித்தேர்வர்கள்: பிளஸ் 2 தேர்வை தனித் தேர்வர்களாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தில் கொடுத்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இணையதளத்தில் பார்க்கலாம்: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணைய தளங்களான www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகியவற்றிலும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி