கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு! - kalviseithi

May 11, 2019

கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!


பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் வருவாய், சொத்து சான்றிதழ் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியல மைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங் குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அடிப்படையில் ஏற்கெனவே இடஒதுக் கீடு பெறுபவர்கள் தவிர, மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.இந்தச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்று வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடந்த ஜனவரியில் மத்திய அரசு கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தின் அடிப் படையில், தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கானசான்றிதழ்கள் வழங்கு வதற்கான உத் தரவுகளை தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்துள்ளது.

சுற்றறிக்கை

இந்நிலையில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் களுக்கு தமிழகவருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் சுற்றறிக்கை யாக வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:ஆதிதிராவிடர், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் என இடஒதுக்கீடு பெறும் வரம்பில் வராதவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் முன் னுரிமை வழங்கும் வகையில், பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினர் என வரம்பிட்டு அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கத் தகுதிகள்

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டுக்கான வரம்பின்கீழ் வராமல், அதே நேரம் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருந்தால் அவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் பயன்பெறுவர். அவர்களது நிலையான சொத்துகளும் வருமான வரம்புக்குள் கணக்கில் எடுக்கப்படுகிறது.அதன்படி, 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம், ஆயிரம் சதுரடிக்கு மேல் வீட்டு மனை வைத்திருப்பவர்கள், பட்டியலிடப்பட்ட நகராட்சிப் பகுதிகளில் 100 சதுர யார்டுகள்அதாவது 900 சதுரடிக்கு மேல் வீட்டு மனை, மற்ற பகுதிகளில் 200 சதுர யார்டு அதாவது 1,800 சதுரடிக்கு மேல் வீட்டு மனை வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரிவின்கீழ் இட ஒதுக்கீடு கிடையாது.இடஒதுக்கீடு கோருபவரின் தாய், தந்தை மற்றும் 18 வயதுக்குட்பட்ட உடன் பிறந்தோருக்கும் இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்கும். அதேபோல், இட ஒதுக்கீடு கோருபவரின் மனைவி அல்லது கணவன், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இதன் பயன் கிடைக்கும்.

சான்றிதழ் அளிக்கும் முறை

சான்றிதழ் பெறுவதற்கான வருமானம் என்பது, அனைத்து குடும்ப உறுப்பினர் களுக்கான சம்பளம், வர்த்தகம், தொழில் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தை குறிக்கும்.விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டு வருமானத்தை குறிப்பிட வேண்டும். மேலும், விண்ணப்பம் பெறப்படும் தாலுகா வின் வட்டாட்சியர்கள், அரசால் வகுத்தளிக் கப்படும் உரிய படிவங்களின்படிதான் வருவாய்,சொத்து சான்றிதழ்களை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சான்றிதழ்கள் செல்லாது.வட்டாட்சியர்கள் சொத்து சான்றிதழ் அளிக்கும்போது, ஏற்கெனவே 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், ஆவணங்களை முழுமை யாக ஆய்வு செய்ய வேண்டும். குடும் பத்தின் சொத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராமம், நகர்ப்புறத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். உள்ளூரில் விசாரணையும் நடத்த வேண்டும். இது தவிர, வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் மிகுந்த கூர்நோக் குடன் விசாரணை மேற்கொண்டு பொரு ளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழ்களை வழங்க பரிந்துரைக்க வேண்டும்.

நோட்டரி பப்ளிக் சான்று

விண்ணப்பதாரரிடம் இருந்து நோட்டரி பப்ளிக் சான்றுடன் கூடிய சுய உறுதி ஆவணத்தை உரிய படிவத்தில் வட்டாட் சியர்கள் பெற வேண்டும்.விண்ணப்பதாரர் பூர்த்தி செய்து அளித்துள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையானதுதானா என்பதையும் வட்டாட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து வட்டாட்சியரால் வருவாய் மற்றும் சொத்துச் சான்று அளிக்கப்பட்ட பின், அந்தச் சான்றிதழ்கள் மாவட்ட இணைய தளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்யப் பட வேண்டும். அத்துடன், சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், ஊடகங் களுக்கு செய்திக்குறிப்பாகஅளிக்க வேண்டும்.எனவே, இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விவரங்களை தெரிவித்து பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு வருவாய், சொத்துச் சான் றிதழ் தரும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

2 comments:

  1. Ada nasama ponavingala....!!! Ingatum intha go amalukku vanthaacha.....konduvaramattom nnu sonnanunga.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி