பி.இ. கலந்தாய்வு: 1.16 லட்சம் பேர் பதிவு - kalviseithi

May 25, 2019

பி.இ. கலந்தாய்வு: 1.16 லட்சம் பேர் பதிவு


பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து  200பேர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.

2019-20 கல்வியாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும், ஜூன் 21 இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும்,ஜூன் 22 இல் விளையாட்டு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

ஜூலை 3 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.இதற்கான விண்ணப்பப் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கியது. பதிவு செய்ய ஒரு வார காலமே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் ஆன்-லைன் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி