1,500 ஆசிரியர்களுக்கு "டெட்' தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்: முதல்வருக்கு வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2019

1,500 ஆசிரியர்களுக்கு "டெட்' தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்: முதல்வருக்கு வேண்டுகோள்!


தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு அந்தத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் ஞாயிற்றுக்கிழமைவெளியிட்ட அறிக்கை:அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் அவர்களுக்கு மேலும் அவகாசம் வழங்க முடியாது. அவர்களுக்கு நோட்டீஸ்அனுப்ப வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு வருத்தமளிக்கிறது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்தநிலையில் இந்த ஆசிரியர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 28,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக பள்ளிக்கல்வித் துறை பிரச்னையினை திசைதிருப்பும் முயற்சியை மேற்கொண்டுவருவது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் நிரந்தரமாகப் பணிபுரிந்ததாக பதிவில்லை.

பி.எட்., படிக்காத நிலையில்கூட சில பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பிறகு பெரும்பாலான பள்ளிகளில் 9- ஆம் வகுப்புவரை அரசு பாடத் திட்டங்களை பின்பற்றவில்லை, அரசு விதித்த கட்டணங்களுக்கு மேலாகவே வசூலித்து வருவது என்பதே நிதர்சன உண்மை. எனவே பிரச்னையை திசை திருப்புவதைக் கைவிட்டு, 1,500 ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

2 comments:

  1. Hai sir.is this correct step of Madras High court. I have one question last eight years how many times that the TN government conducted tet exam.how they say they are qualified teachers.please kindly help union leaders for that teachers.

    ReplyDelete
  2. I ask a question to all that tet passed candidates are fools? The high court judgement is very right all the 1500 teachers must pass in tet exam then only they are eligible teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி