முறையான அங்கீகாரம், உள்கட்டமைப்பு வசதி இல்லாத 16 பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2019

முறையான அங்கீகாரம், உள்கட்டமைப்பு வசதி இல்லாத 16 பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் நோட்டீஸ்


நாமக்கல் மாவட்டத்தில் முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாத 16 பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அங்கீகாரம் தொடர்பாக முறையான ஆவணம் சமர்ப்பிக்கவில்லை என்பதாலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 3 சிபிஎஸ்சி பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், 11 நர்சரி பள்ளிகள் என 16 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், சுகாதாரம், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் சுகாதாரம், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டிகள், கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர், மின் இணைப்புகள், இணைய வசதி, மேசை மற்றும் நாற்காலிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்து செப்பனிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை, பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீரை முழுமையான அளவில் விநியோகம் செய்ய பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் முழு உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நாமக்கல்லில் முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாத 16 பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் விளக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த வகையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் 25 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அங்கீகாரமின்றி செயல்படும்  பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி