வேளாண் படிப்புகளுக்கு 2 நாளில் 20,000 மாணவர்கள் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2019

வேளாண் படிப்புகளுக்கு 2 நாளில் 20,000 மாணவர்கள் விண்ணப்பம்


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள், 27 இணைப்பு கல்லுாரிகளில் 10 பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8ஆம் தேதி ஆரம்பமானது.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன்7 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய இரண்டே நாட்களில் 20,000க்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள், 27 இணைப்பு கல்லுாரிகளில் 10 பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8ஆம் தேதி ஆரம்பமானது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன்7 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்ணப்ப பதிவு துவங்கிய இரண்டு நாட்களிலேயே மிக அதிகமான விண்ணப்பங்கள் சேர்ந்துவிட்டன. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. விண்ணப்ப பதிவைப் வெள்ளிக்கிழமை மாலை வரை வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது. 60% மாணவிகள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும்நாட்களில் இன்னும் அதிக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் என வேளாண் பல்கலைக்கழக டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து முழுமையானவிபரங்களை http://www.tnau.ac.in/ugadmission.html  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி